உடனடிச்செய்திகள்

Monday, December 10, 2012

கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடுக! மதுரை சாலை மறியலில் 220 பேர் கைது!


கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடுக! மதுரை சாலை மறியலில் 220 பேர் கைது!


கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடுகாவல்படை முற்றுகையைக் கைவிட்டுபொய் வழக்குகளை இரத்து செய் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துஇன்று மதுரையில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


போராட்டத்திற்குஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) மக்கள் விடுதலை மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையேற்றார். தமிழக மக்கள் சனநாயகக் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. கே.எம்.ஷெரிப்தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு. க.பரமந்தாமன்தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் மோகன்ராசுதமிழ்ப்புலிகள் துணைப் பொதுச் செயலாளர் பேரறிவாளன்ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் தோழர் விஜயக்குமார்விடுதலை சிறுத்தைகள் மாநில துணைப் பொதுச்செயலாயர் திரு. எல்லாளன்பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பாளர் திரு. நசுருதீன்எஸ்.டி.பி.ஐ. பொறுப்பாளர் திரு. ஜாபர்பெண்கள் முன்னணி திரு. ஜானகிதமிழ்நாடு மக்கள் கட்சிப் பொறுப்பாளர் வழக்கறிஞர் விஜயன்மக்கள் சிவில் உரிமைக் கழகத் தமிழகத் துணைத் தலைவர் திரு. கண.குறிஞ்சிசெந்தில் (நாம் தமிழர் கட்சி)சங்கர் அம்பேத்கர் (தியாகி இம்மானுவேல் பேரவை)செந்தில் (சேவ் தமிழ் இயக்கம்)தோழர் அரங்க குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்)தோழர் கி.வெ.பொன்னையன்தாளாண்மை திருநாவுக்கரசுகனி(மா.பெ.பொ.க.)பரிதி(தமிழ் தமிழர் இயக்கம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும்அமைப்புத் தோழர்களும் இதில் பங்கேற்றுக் கைதாயினர்.


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் அ.ஆனந்தன்குழ.பால்ராசுபொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ.இராசுதமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் செந்தில்குமார்மகளிர் ஆயம் மதுரை அமைப்பாளர் தோழர் செரபினா உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.


கைது செய்யப்பட்டத் தோழர்கள்தற்போது மதுரை சிம்மக்கல் ஆட்டுமந்தை திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.


கூடங்குளம் அணுமின்நிலையத்தை கடல் வழியாக  முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர்ஆயுதப்படையினர்காவல்துறையினர் என 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குவிக்கப் பட்டுள்ளனர்.

இதுதவிரஅணுமின் நிலையத்தை சுற்றிமத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இடிந்தகரை உள்ளிட்ட மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள்கடல் வழியாக படகில் சென்று அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.





(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT