உடனடிச்செய்திகள்

Wednesday, January 28, 2009

சிங்கள அரசிற்கு தஞ்சையிலருந்து ஆயுதம் : விமானப்படைதளம் முற்றுகை போராட்டம்

ஈழத்தில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசு கலந்து கொண்டுள்ளது. தஞ்சையில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தின் மூலம் சிங்கள அரசிற்கு இராணுவ தளவாடங்களை இந்திய அரசு அனுப்பியுள்ளதைக் கண்டித்தும் அத்தளத்தை உடனடியாக இழுத்து மூடக் கோரியும் அவ்விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 31-01-2009 அன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை மேலவத்தாச்சாவடி சந்திப்பு அருகே பேரணியாக புறப்பட்டுச் சென்று விமானப்படைத் தளத்தை மூட வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டத்தில் இதில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் த.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். த.தே.பொ.க., பெ.தி.க., த.தே.வி.இ., தமிழர் கழகம் உள்ளிட பல்வேறு அமைப்புகள் பங்கெடுக்கின்றன.

ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற தாய்தமிழர்கள் கட்சி வேறுபாடு கலந்து இம்முற்றுகைப் போராட்டத்திற்கு வருமாறு உரிமையோடும் உறவோடும் கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்,
தமிழர்கள் ஒருங்கிணைப்பு.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT