உடனடிச்செய்திகள்

Sunday, January 25, 2009

மொழிப்போர் தியாகிகள் தினம் த.தே.பொ.க. அஞ்சலி

இன்று மொழிப்போர் தியாகிகள் நாள்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் அஞ்சலி
 
1938-1965 ஆகிய ஆண்டுகளில் இந்தித் திணிப்பில் ஈடுபட்ட இந்திய அரசைக் கண்டித்து தீக்குளித்தும், நஞ்சுண்டும், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று(25-1-2009) கடைபிடிக்கப்படுகிறது.

திருச்சி
இதனை முன்னிட்டு, இன்று காலை திருச்சியில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திப் பேசினார். திராவிட இயக்கங்களின் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை மோசடிக் கொள்கை என்றும், தமி்ழ் மட்டுமே அனைத்து நிலைகளிலும் செயல்பட வழிவகுக்கும் ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்றும் அவர் பேசினார்.

மேலும், மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை தமிழகக் கல்விப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என்றும் மொழிப்போரில் உயர்நீத்த 500க்கும் மேற்பட்ட் தியாகிகளுக்கு அந்தந்த ஊர்களில் நினைவகம் எழுப்பப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை
சென்னையில் மூலக்கொத்தளம் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாலமுத்து நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் இன்று காலை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  முன்னதாக அவர்கள் வள்ளலார் நகர் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு வந்தனர்.

 
இந்நிகழ்வில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, சிவகாளிதாசன் உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பங்கேற்ற ஏராளமான தமிழ் உணர்வாளர்கள் மொழிப் போர் தியாகளுக்கு அஞ்சலி தெரிவித்தும் தமிழினப் படுகொலையை மெற்கொள்ளும் சிங்கள அரசிற்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
 
சிதம்பரம்
மொழிப்போரில் இந்திய அரசின துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் இன்று மாலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் அரவிந்தன், சிதம்பரம் நகர த.தே.பொ.க. செயலாளர் கு.சிவப்பரிகாசம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொள்கின்றனர்.
 
தஞ்சை
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் நடைபெறும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்டபினர் கி.வெங்கடராமன் சிறப்புரையாற்றுகிறார்.
 

 
TamilBloggersUnit said...

நல்லா எழுதியிருக்கீங்க...

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT