மூவர் மரண தண்டனையை இரத்து செய்க
ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்
ஓசூர், 13.08.2011.
இராசீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக அநியாயமாக சிறையிலருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை தமிழக அரசு, ஆளுநர் மூலம் இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஓசூரில் இன்று(13.08.2011) ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் அனுமதி மறுத்திருந்த காவல்துறையினர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பின் அனுமதியளித்தனர். இதையடுத்து ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் நடவரசன் தலைமை தாங்கினார். தமிழக இளைளுனர் ஒருங்கிணைப்பு இயக்க தோழர் பிரசாத், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி செந்தமிழ், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாக விசுவநாதன் உள்ளி்ட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் கோ.மாரிமுத்து பேசினார். அவர் பேசும் பொது, இராசீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள இன்றும் பல விடயங்கள் மர்மமாக, விசாரக்கப்படாத நிலையில் இருக்கும் போது இப்படி அவசர அவசரமாக மரண தண்டனைக்கு உத்தரவிடுவது சரியல்ல என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். ஆர்ப்பாட்டாத்தில், பொது மக்களையும், தமிழின உணர்வாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு
Post a Comment