உடனடிச்செய்திகள்

Friday, October 25, 2013

பொதுநல நாடுகள் மன்ற மாநாட்டை இலங்கையில் நடத்தாதே!இந்தியா – இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகை 300 பேர் கைது!


பொதுநல நாடுகள் மன்ற மாநாட்டை இலங்கையில் நடத்தாதே!
இந்தியா – இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகை 300 பேர் கைது!

இனப் படுகொலை நாடான இலங்கையில் பொதுநல நாடுகள் மன்ற மாநாட்டை நடத்தாதே என்று வலியுறுத்தி இன்று (25.10.2013) காலை 10.00 மணியளவில் சாசுத்திரி பவன் மற்றும் இங்கிலந்து துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருகிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமையேற்றார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்தியா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிலாளர்கள் அணி பொதுச் செயலாளர் சைதை சிவா, மனிதநேய மக்கள் கட்சி மாணவரணி மாநிலச் செயலாலர் தோழர் அனிஸ், சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா துணைப் பொதுச் செயலாளர் அம்சா, தமிழக மக்கள் சனநாயக கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் ஆதிதிராவிடன், திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன், மக்கள் விடுதலை இயக்கத் தலைவர் இரவி, உயிரிதுளிகள் இயக்கம் முகிலன், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் சிபி உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் திரளானோர் பங்கேற்று 300 தோழர்கள் கைதாகி கிரீம்சு சாலை அருகில் மண்டபத்தில் வைக்கப் பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைக் கட்சி சார்பாக பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், சென்னை நகரச் செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் நகரச் செயலாளர் இளங்குமரன், தமிழக இளைஞர் முன்னணி தாம்பரம் நகரச் செயலாலர் தோழர் வெற்றித் தமிழன், சென்னை நகரச் செயலாளர் தோழர் கோவேந்தன், மகளிர் ஆயம் தோழர் ம.லெட்சுமி, தோழர் புதுமொழி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று கைதாயினர்.

இந்திய அரசே ! இந்திய அரசே !
ஈழத்தமிழர் பிணங்களை தின்று தீர்த்த இந்திய அரசே !

காமன் வெல்த் மாநாடா!
சிங்களவனின் மாமன் மச்சான் மாநாடா!
பொதுநல மாநாடா?
கொலைக் காரன் இராசபட்சே புகழ் சூட்டும் மாநாடா?

கனடா நாட்டை பாரடா ! காமன் வெல்த்தைப் புறக்கணித்தது
ஏனடா இந்திய இலங்கையே
அந்த நாள் ஆரியப் பாசமா?
சிங்களன் உணக்கு பங்காளி?
தமிழர் உனக்குப் பகையாளியா?

வெளியேற்று வெளியேற்று
காமன் வெல்த் அமைப்பிலிருந்து
சிங்கள நாட்டை வெளியேற்று

மனித உரிமைகள் மாண்புகள் என்று
மகத்துவம் பேசும் பிரிட்டன் அரசே!
மகிந்த இராசபட்சே செய்த
மனிதப் படுகொலைத் தெரியலையா ?

நடத்தாதே நடத்தாதே காமன் வெல்த் மாநாட்டை
கொலைக் கார கொழும்பு நகரில் நடத்தாதே

போன்ற முழக்கங்கள் எழுப் பட்டது.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT