முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பை எதிர்த்துக்
கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட,
ஐயா பழ.நெடுமாறன் உள்ளிட்ட தோழர்கள் விடுதலை!
திருச்சி – தஞ்சை சாலையில் உற்சாக வரவேற்பு!
இந்திய
– சிங்களக் கூட்டுப்படைகளால் இனப்படுகாலை
செய்து கொல்லபட்ட தமிழீழ
மக்களின் நினைவாக, தஞ்சை
விளாரில் எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால்
நினைவு முற்றத்தின் முன்
அமைந்திருந்த பூங்காவையும், சுற்றுச்சுவரையும்,
13.11.2013 அன்று அதிகாலை சட்டவிரோதமாக
இடித்துத் தள்ளியது தமிழக
அரசு. தமிழக
அரசின் இச்செயலை எதிர்த்த,
அய்யா பழ.நெடுமாறன்
அவர்களை காவல்துறை கைது
செய்தது.
ஐயா
நெடுமாறனோடு முற்றத்தில் இருந்த,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்
கட்சித் தலைமைச் செயற்குழு
உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், நாம்
தமிழர் கட்சி மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, திருச்சி
மாநகர த.தே.பொ.க. செயலாளர் தோழர்
த.கவித்துவன்,
தமிழ்நாடு மள்ளர் களம்
அமைப்பாளர் திரு. செந்தில்
மள்ளர் உள்ளிட்ட பல்வேறு
அமைப்பு செயல்பாட்டாளர்கள் மற்றும்
தோழர்கள் 82 பேரும்
கைது செய்யப்பட்டனர்.
அனைவர்
மீதும் கொலை முயற்சி,
பொது சொத்துக்கு சேதம்
உள்ளிட்ட பிரிவுகளை உள்ளடக்கிப்
பொய் வழக்குப் புனைந்து
திருச்சி நடுவண் சிறையில்
அடைத்தது, தமிழகக்
காவல்துறை.
சிறையிலிருந்த
தோழர்களுக்கு தஞ்சை மாவட்ட
நீதிமன்றம் பிணை மறுத்துவிட,
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்
கிளையில் முறையிடப்பட்டு, அனைவருக்கும்
20.11.2013 அன்று எவ்வித நிபந்தனையும்
இன்றி, நீதிமன்றப்
பிணையாணைப் பெறப்பட்டது.
இதனையடுத்து,
இன்று (22.11.2013) காலை
திருச்சி நடுவண் சிறையிலிருந்து
அய்யா பழ.நெடுமாறன்
உள்ளிட்ட தோழர்கள் விடுதலையாயினர்.
சிறை வாயிலில், நாம்
தமிழர் கட்சித் தலைமை
ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்,
விடுதலைத் தமிழ்ப்புலிகள் அமைப்பாளர்
திரு. குடந்தை
அரசன், தமிழக
வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட
அமைப்பாளர் தோழர் தமிழ்நேசன்
உள்ளிட்ட பல்வேறு அமைப்புத்
தலைவர்களும், தோழர்களும் அவர்களை
வரவேற்றனர்.
திருச்சியிலிருந்து
தஞ்சை செல்லும் வழிகளில்,
சிறை மீண்டத் தோழர்களை
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்
கட்சி உள்ளிட்ட பல்வேறு
அமைப்புகள் சார்பில் வரவேற்று
ஆங்காங்கு சிறப்பு செய்யப்பட்டன.
காலை
10.30 மணியளவில், புதுக்குடி
வந்தடைந்த அய்யா நெடுமாறன்
உள்ளிட்ட தோழர்களை, தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சி
பூதலூர் ஒன்றியச் செயலாளர்
தோழர் க.காமராசு,
தமிழக இளைஞர் முன்னணி
நடுவண் குழு உறுப்பினர்
தோழர் காமராசு தலைமையிலான
தோழர்கள் வரவேற்றனர்.
அதன்பின்,
செங்கிப்பட்டி வந்தடைந்த தோழர்களை,
அதிர்வேட்டுகள் முழங்க, தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சித்
தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில்,
மாவட்டச் செயலாளர் தோழர்
குழ.பால்ராசு,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
தோழர் ரெ.கருணாநிதி,
தமிழக இளைஞர் முன்னணி
ஒன்றியத் தலைவர் தோழர்
அ.தேவதாசு,
நடுவண் குழு உறுப்பினர்
தோழர் தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட
த.தே.பொ.க. தோழர்களும், பல்வேறு
அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும்
திரளாகக் கூடி நின்று
வரவேற்றனர். கூடி
நின்றத் தோழர்களிடம், அய்யா
பழ.நெடுமாறன்
அவர்கள் உரையாற்றினார்.
வல்லம்
வந்தடைந்த தோழர்களை, தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சி
பொதுக்குழு உறுப்பினர் தோழர்
சி.முருகையன்
தலைமையிலான த.தே.பொ.க. தோழர்களும், மனித
நேய மக்கள் கட்சி
உள்ளிட்ட பிற அமைப்புத்
தோழர்களும் வரவேற்றனர்.
நிறைவாக,
தஞ்சை விளார் முள்ளிவாய்க்கால்
முற்றத்தை வந்தடைந்த தோழர்கள்
அனைவருக்கும் பட்டாடை அணிவித்துப்
பாராட்டு செய்யப்பட்டது. தோழர்களை
சிறையிலிருந்து மீட்க வழக்காடிய,
ம.தி.மு.க. வழக்கறிஞர் வடிவேல்,
மக்கள் உரிமைப் பேரவை
ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி உள்ளிட்டோருக்கு
சிறப்பு செய்யப்பட்டது.
சிறை
மீண்டத் தோழர்களின் உற்சாகம்,
தமிழின விடியலுக்கு மேலும்
உரம் சேர்க்கும் வகையில்
அமைந்தது.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : ஸ்டாலின்)
Post a Comment