உடனடிச்செய்திகள்

Sunday, October 6, 2019

புரட்சித்தாய் வாலாம்பாள் அவர்களுக்கு 10 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!


புரட்சித்தாய் வாலாம்பாள் அவர்களுக்கு 10 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் அருகே சௌந்திரசோழபுரம் தென்னஞ்சோலை நினைவிடத்தில் தமிழ்த்தேசியப் போராளி புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் துணைவியார், புரட்சித்தாய் வாலாம்பாள் அவர்களுக்கு 10 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிழ்வில் தமிழர் நீதிக்கட்சி நிறுவனர் சுபா. இளவரசன், என்.எல்.சி. தொழிற்சங்க நிர்வாகி சண்முகம், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தோழர் சோழநம்பியார், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் க. கண்ணதாசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் கு. மாசிலாமணி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் அரா. கனகசபை, தோழர் மா. மணிமாறன், தமிழக மாணவர் முன்னசணி நடுவண்குழு உறுப்பினர் தி. ஞானபிரகாசம் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. முருகன், தோழர்கள் சி. பிரகாசு, மு. பொன்மணிகண்டன், சி. பிரபாகரன், மகளிர் ஆயம் பொருளாளர் ம. கனிமொழி, தோழர்கள் மு.வித்யா, மு. தமிழ்மணி உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT