உடனடிச்செய்திகள்

Monday, August 9, 2021

கடல்தீபன் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது ஐயா பெ. மணியரசன் இரங்கல்!
கடல்தீபன் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது

தமிழ்த்தேசியப் பேரியக்கத் 
தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!


நாம் தமிழர் கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தம்பி கடல்தீபன் காலமான செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. தமிழீழத்தில் நம் இனம் மக்கள் கூட்டம் கூட்டமாக சிங்கள பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்த போது அந்தத் துயரம் பொறுக்காமல் வெளிநாட்டில் வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் தாயக மக்களைத் திரட்டுவதற்கு களப்பணியில் இறங்கியவர் தம்பி கடல் தீபன்.

நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் கடலூரில் நடத்தினார். அதனால் ஆத்திமுற்ற ஆட்சியாளர்கள் ஏதேச் சதிகார குண்டர் சட்டத்தில் கடல் தீபனை சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் வாதாடி 72 நாள் சிறைவாசகத்திற்கு பிறகு விடுதலை ஆனார்.

புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டபோது மக்களைக் காப்பாற்றக் களம் இறங்கியவர். தானே புயலில் அவர் ஆற்றிய  மக்களைப் பாதுகாக்கும் பணியை அனைவரும் பாராட்டினர். அதே போல் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றக் குருதிக்கொடை கொடுப்பதில் சாதனைப் படைத்தவர். அதற்கான பாராட்டுகளைப் பெற்றவர். நாம் தமிழர் கட்சியில் துடிப்புமிக்க தமிழ்த்தேசியராய் ஆற்றல் மிகு களப்பணி வீரராய் பணியாற்றிய தம்பி கடல் தீபனின் மறைவு வேதனை மிக்கது. கடல் தீபன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் தமிழ்த்தேசியப்பேரியக்கம் சார்பில் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT