உடனடிச்செய்திகள்

Wednesday, March 16, 2011

ஆலுக்காஸ் மறியலில் கைது செய்யப்பட்ட த.தே.பொ.க.வினர் 124 பேர் பிணையில் விடுதலை!

மலையாள ஆலுக்காஸ் நகைக்கடை மறியல் போராட்டத்தில் கைதான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் 124 பேர் நேற்று(15.09.2011) மாலை பிணையில் விடுதலை செய்ப்பட்டனர்.
தமிழ்நாட்டின் தொழில், வணிகம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வெளிமாநிலத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த இழிவை துடைக்கும் நோக்கில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சையில் இயங்கி வந்த மலையாள ஆலுக்காஸ் நகைக்கடையை கடந்த 09.03.2011 அன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியது.
பலநூறு பேர் கலந்து கொண்ட அப்போராட்டத்தின் போது ஆலுக்காஸ் நகைக்கடை மூடப்பட்டது. முடிவில், போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மெற்பட்ட உணர்வாளர்களை தமிழக காவல்துறை பொய்வழக்குப் போட்டு கைது செய்தது. 124பேர் திருச்சி நடுவண் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் தமிழா; உரிமைக்காகப் போராடிய உணர்வாளர்களை காவல்துறை கைது செய்ததை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் த.தே.பொ.க.வினர் சுவரொட்டி பிரச்சார இயக்கத்தை நடத்தினர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு செசன்ஸ் நீதிமன்றம் பிணை மறுத்தது. பின்னர், மாவட்ட நீதிமன்றத்தில் பிணை மனு மேல் முறையீடு செய்யப்பட்டது. மாவட்ட நீதிமன்ற நீதிபதி தோழர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று(15.03.2011) மாலை திருச்சி நடுவண் சிறையிலிருந்து த.தே.பொ.க. தோழர்கள் 124 பேரும் விடுதலையாயினர். சிறை வாயிலில், அவர்களை வரவேற்க பலநூறு த.தே.பொக. தோழர்களும் தலைவர்களும் கூடியிருந்தனர்.
தமிழ்த் தேசப் பொதுசுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கி.வெங்கட்ராமன், குழ.பால்ராசு, வழக்கறிஞர் கரிகாலன், சிவராஜ் உள்ளிட்டோர் விடுதலையான தோழர்களுக்கு வரவேற்பு அளித்துப் பேசினர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன், தஞ்சை நகர த.தே.பொ.க. செயலாளர் இராசு.முனியாண்டி, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, தஞ்சை நகர த.இ.மு. செயலாளர் செந்திறல் உள்ளிட்ட விடுதலையான 124 தோழர்களுக்கும் வந்திருந்த உணர்வாளர்கள் பாராட்டுத் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.








Unknown said...

வாழ்த்துக்கள்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT