தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயுற்குழுக் கூட்டம் 20-03-2011 அன்று திருச்சியில் த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கி.வெங்கட்ராமன், கோ.மாரிமுத்து, நா.வைகறை, அ.ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்கள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் கட்சிகள் வாக்காளர்களுக்கு கையு+ட்டுக் கொடுப்பதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகின்றது. தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் தேவை. ஆனால், தடுப்பு நடவடிக்கை என்ற பெயாpல் தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் வகையில் அத்துமீறிச் செயல்படுவதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
சொந்த செலவுகளுக்கும், வணிகம் மற்றும் தொழில் காரணங்களுக்கும் சாதாரண தொகை எடுத்துச் செல்வோரிடம் அதற்கான ஆவணம் கேட்பதும், ஆவணம் இல்லையென்று அத்தொகையினை பறிமுதல் செய்வதும் அராஜகமாகும். ரூ. 80,000ஃ-இ ரூ. 2 இலட்சம், ரூ 5 இலட்சம், போன்ற மிகக் குறைந்த தொகைகளையும், சட்டப்படி எடுத்துச் செல்லப்படாதத் தொகை என்று கூறி பறிமுதல் செய்துள்ளனர். இப்படிப்பட்ட குறைந்த தொகைகளுக்கு சட்டப்படியான ஆவணம் என்ன இருக்க முடியும்?
கும்பகோணம் - நாச்சியார் கோயில் பகுதியிலிருந்து வழக்கமான தங்கள் விற்பனைக்காக கைவினைஞர்கள் செய்து கொடுத்த 60 வெண்கல குத்துவிளக்குகளைக்கூட பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் தனக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தை ஒரு காட்டாட்சி தர்பார் நடத்த பயன்படுத்தக் கூடாது.
கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது, எந்த வகையான சுவரொட்டியும் ஒட்டக்கூடாது என்றும் அரசியலுக்கு அப்பாற்பட்ட சுவரொட்டிகள் கூட ஒட்டக்கூடாது என்றும் தனியார் சுவாpல் உரிமையாளாpன் அனுமதியுடன்கூட விளம்பரம் செய்யக் கூடாது என்றும் மண்டபங்களிலோ அனுமதிக்கப்பட்ட திடல்களிலோகூட கூட்டம், கருத்தரங்கம் போன்றவை நடத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடத்தும் கலகமாகும். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை, அமைப்பு நடத்தும் உரிமை, பரப்புரை உரிமை ஆகியவற்றைத் தடை செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கும் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு சர்வாதிகார ஆட்டம் போடும் காவல்துறைக்கும் எங்கிருந்து அதிகாரம் வருகிறது?
தேர்தல் ஆணையம் தனது அதிகார வெறியைக் காட்ட ஆசைப்படுகிறதே தவிர தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையைச் சாpவர செய்ய அக்கறை காட்டவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் தமிழ்நாட்டில் எல்லா கட்சிகள் மற்றும் கட்சி சார்பற்றவர்கள் முறையிட்டும்கூட தேர்தல் தேதியை மாற்றாமல் மாணவர்களின் தேர்வு காலத்தில் தேர்தலை நடத்துவதாகும்.
இரண்டு மாதங்களுக்கு மட்டும் நடத்தும் இந்த சா;வாதிகார அற்பத்தனங்களை தோ;தல் ஆணையம் கைவிட்டு தன்னை அரசமைப்புச் சட்ட வரம்பிற்கு உட்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
மக்களின் அடிப்படை உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது. அதேவேளை தோ;தல் கட்சிகள் வாக்காளா;களைக் கவர கையு+ட்டு கொடுப்பது உட்பட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது போன்றவற்றின் மீது சட்டப்படியான, முறையான நடவடிக்கைகள் எடுப்பதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வரவேற்கிறது.
2. தேர்தலைப் புறக்கணிப்போம்!
தமிழ்நாடு சட்டமன்றம் என்பது இறையாண்மையுள்ள அமைப்பு அல்ல. இந்திய அரசிற்கு கங்காணி போல் செயல்படக் கூடிய தன்மையுடையது. எந்தக் கட்சி தோ;தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் தமிழா;களின் உரிமைகளையோ, நலன்களையோ பாதுகாக்கும் அதிகாரம் அதற்கு இல்லை. அதிகாரமற்ற சட்டமன்றத்திற்கு போட்டியிடாத தோடு மட்டுமின்றி எவருக்கும் வாக்களிப்பது இல்லை என்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முடிவெடுத்துள்ளது.
இந்நிலைபாட்டை விளக்கி தமிழகம் முழுவதும் பரப்புரை செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
3. ஆலுக்காஸ் மறியல் போராட்ட வழக்கைத் திரும்பப் பெறுக!
தமிழகத்தில் பெருகிவரும் மார்வாடிகள், மலையாளிகள் உள்ளிட்ட அயலார் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கடந்த 09.03.2011 அன்று தஞ்சையில் மலையாள ஆலுக்காஸ் நிறுவனம் முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட தோழா;கள் மீது தனியார் சொத்தழிப்பு சட்டப் பிரிவு 3(1) கீழும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 143, 188 ஆகியவற்றின் கீழும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து 120 தோழா;களை திருச்சி நடுவண் சிறையில் அடைத்தது.
கா;நாடகம். கேரளம், மராட்டியம், போன்ற மாநிலங்களில் மாநில உரிமைகளுக்காக மக்கள் போராடும் போது அவா;கள் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளைப்போட்டு சிறையில் அடைப்பது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இனத்துரோக ஆட்சிகள் மண்ணின் மக்களுக்காகப் போராடும் போது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சிறையில் அடைக்கிறது. இச்செயலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆலுக்காஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
Post a Comment