மலையாள ஆலுக்காஸ் மறியலில் ஈடுபட்டோர் மீது பொய்வழக்கு!
சிறையில் அடைப்பு! தமிழக அரசுக்கு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்!
ஏற்கெனவே அறிவிப்பு செய்திருந்த படி 09.03.2011 அன்று தஞ்சையில் உள்ள மலையாள ஆலுக்காஸ் நகைமாளிகை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 147, 143, 188 மற்றும் தனியார் சொத்து அழிப்பு மற்றும் சேதப் பிரிவு - 3(1) ஆகிய பிரிவுகளில் பிணையில் வர முடியாதபடி காவல்துறை வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்பியுள்ளது. இச்செயல் சனநாயக விரோதம் மட்டுமின்றி சட்ட விரோதமும் ஆகும்.
ஆலுக்காஸ் நகை மாளிகையில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. போராட்டக்காரர்களால் சேதம் ஏற்பட்டதாக ஆலுக்காஸ் நிர்வாகம் காவல்துறையில் புகாரும் கொடுக்கவில்லை. தஞ்சை நகரக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மங்கலநாதன் தன்னிச்சையாக, பழிவாங்கும் நோக்கத்தோடு பிணையில் விட முடியாதபடி தனியார் சொத்து அழிப்பு பிரிவை இவ்வழக்கில் சேர்த்துள்ளார்.
வழக்கின்படி சேதம் அடைந்த சொத்தின் விவரங்களை நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்யவும் இல்லை.
தமிழ்நாட்டை சுரண்டிக் கொழுத்து மண்ணின் மக்களின் தொழில், வணிக, வேலை வாய்ப்பு ஆகியவற்றை பறித்துக் கொள்ளும் மலையாளி, மார்வாடி மற்றும் பிற அயல் இனத்தாருக்கு சேவகம் செய்து கொண்டு தமிழினத்திற்கு துரோகம் செய்யும் தமிழக ஆட்சி, இப்படிப்பட்ட அதிகாரிகள் பொய் வழக்கு போட, தமிழின உரிமைக்காக போராடுவோரை பழிவாங்க ஊக்கம் அளித்துக் கொண்டிருக்கிறது.
பொய் வழக்கு போட்ட தமிழகக் காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட தோழர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
நாள் : 09.03.2011
இடம் : தஞ்சாவு+ர்.
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
Post a Comment