தஞ்சையில் மலையாள ஆலுக்காஸ் நகைக்கடை முன்
த.தே.பொ.க. மறியல்!
350க்கும் மேற்பட்டோர் கைது! கடை மூடப்பட்டது!
350க்கும் மேற்பட்டோர் கைது! கடை மூடப்பட்டது!
மலையாளிகள் நடத்தும் தஞ்சை ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை முன் இன்று 09.03.2011 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடந்த மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது.
தமிழகத்தின் தொழில், வணிகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீடித்து வரும் அயல் இனத்தார் ஆக்கிரமிப்பை கண்டிக்கும் வகையில், மலையாளிகள் நடத்தும் ஆலுக்காஸ் நகைக்கடை முன் மறியல் நடத்தப்படும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் பாரம்பர்யமாக நகைத் தொழில் செய்து வரும் பொற்கொல்லர்களின் தற்கொலைக்கு வெளிமாநிலத்தவர் இத்தொழிலில் ஆதிக்கம் செய்வதேக் காரணம் என்றும் மலையாளிகள் நடத்தும் ஆலுக்காஸ் நகை நிறுவனத்தின் முன் இதனைக் கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று 09.03.2011 தஞ்சை தென் கீழ் அலங்கத்தில் உள்ள ஜோய் ஆலக்காஸ் மற்றும் பிரான்சிஸ் ஆலுக்காஸ் நகைக்கடன் முன் த.தே.பொ.க. தோழர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன் இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மறியிலில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் வாக்குவாதம் செய்த போது, கடைக்குள் செல்ல முற்பட்ட பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றது.
த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் முனியாண்டி, பு+தலூர் ஒன்றியச் செயலாளர் இரெ.கருணாநிதி, புதுக்குடி காமராசு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மதுரை ஆனந்தன், ஓசூர் கோ.மாரிமுத்து, பொதுக் குழு உறுப்பினர்கள் கோவை பா.சங்கர், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, நகரச் செயலாளர் செந்திறல், சிதம்பரம் த.இ.மு. செயலாளர் குபேரன், நாகை இரவி, திருத்துறைப்பு+ண்டி அரசு, கீரனூர் ஆரோக்கியசாமி, பரமக்குடி இளங்கோ, திருச்சி கவித்துவன், மதுரை இராசு, காட்டுமன்னார்க்குடி அருளமுதன், சென்னை நாகராஜன், மகளிர் ஆயம் பொறுப்பாளர்கள் பு+தலூர் மீனா, தஞ்சை இலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு கைதாயினர்.
ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை முன் எச்சிரிக்கை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், மறியலுக்குப் பின் பிரான்சிஸ் ஆலுக்காஸ் நகைக்கடையும் மூடப்பட்டது. ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆவடி திண்ஊர்தி தொழிற்சாலையில் பீகாரிகள் அதிக எண்ணிக்கையில் வேலையில் அமர்த்தபட்டதைக் கண்டித்து த.தே.பொ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது நினைவிருக்கலாம்.
இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், “இது ஓர் அடையாளப் போராட்டம் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment