உடனடிச்செய்திகள்

Monday, March 7, 2011

'வந்தவனெல்லாம் வாழ தமிழ்நாடு இனி திறந்த வீடல்ல” - நா.வைகறை பேச்சு!


”வந்தவர்களெல்லாம் வாழ தமிழ்நாடு இனி திறந்த வீடல்ல” என தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை பேசினார். சென்னை ஆவடி திண்ஊர்தி தொழிற்சாலையில் அதிக எண்ணிக்கையில் பீகாரிகள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்கள் பணியில் அமர்த்தப்பட்டதைக் கண்டித்தும், மண்ணின் மக்களான தமிழர்களுக்கு வேலையில் 85 விழுக்காடு முன்னுரிமை கொடுக்கக் கோரியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 05.03.2011 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். தமிழர் தன்மானப் பாசறை அமைப்பின் அமைப்பாளர் ஆவடி மனோகரன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, தமிழர் தேசிய இயக்கத்தின் அமைப்பாளர் மு.முத்தமிழ்மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், ”வெளியேற்று வெளியேற்று! வெளியாரை வெளியேற்று!”, ”எங்கள் மண்ணில் நின்று கொண்டு எங்களுக்கே புறக்கணிப்பா? என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிறைவாக, சிறப்புரை ஆற்றிய, நா.வைகறை, 'தமிழ்நாட்டில் வந்தனெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறான். தமிழன் இன்னும் விழிப்புணர்வு பெறாமல் இருக்கிறான். பீகாரில் பீகாரிகள் பீகாரிகளாக இருக்கிறார்கள், கர்நாடகத்தில் கன்னடர்களாக இருக்கிறார்கள், கேரளத்தில் மலையாளிகளாக இருக்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் தான் தமிழர்கள் தமிழர்களாக இல்லாமல் இந்தியனாகவும், திராவிடனாகவும் சீரழிந்து கொண்டிருக்கிறான். இந்த அடிமை நிலைமை மாற வேண்டும்” என்று பேசினார்.

இவ்வார்ப்பாட்டத்தில் திரளான தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT