உடனடிச்செய்திகள்

Tuesday, February 10, 2009

இந்திய அரசு வரி அலுவலகங்களை இழுத்து மூடுவோம்: தமிழர் ஒருங்கிணைப்பு முடிவு!

இந்திய அரசு வரி அலுவலகங்களை இழுத்து மூடுவோம்: தமிழர் ஒருங்கிணைப்பு முடிவு!

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவிகளை புரிந்து வரும் இந்திய அரசுக்கு எதிராக தமிழகமெங்கும் போராடிட "தமிழர் ஒருங்கிணைப்பு" என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கடந்த 31-01-09 அன்று இலங்கை பலாலி விமானதளத்திற்கு ஆயதங்கள் கொண்டு செல்லப்படும் தஞ்சை விமானப்படை தளத்தை தமிழர் ஒருங்கிணைப்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம்.

இதனையடுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, தமிழர் வரிப்பணத்தில் ஈழத்தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்தக்கோரி "தமிழர் ஒருங்கிணைப்பு" தமிழகத்தில் வருமான வரி மற்றும் உற்பத்தி வரி உள்ளிட்ட இந்திய அரசு வரி நிறுவனங்களை முற்றுகையிடும் போரட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

"இந்திய அரசின் வரி வாங்கும் நிறுவனங்களை இழுத்து மூடுவோம்" என்ற முழக்கத்துடன் இந்த முற்றுகைப் போராட்டம் 20.02.2009 வெள்ளிக்கிழமை அன்று சென்னை,கோவை,சேலம்,ஈரோடு,மதுரை,தஞ்சை,ஆகிய ஊர்களில் நடக்கும் என தமிழர் ஒருங்கிணைப்பு அறிவித்துள்ளது.
Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT