சென்னை, 20-2-2009.
ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்தியா உதவிகள் புரிவதைக் கண்டித்து சென்னையில் மத்திய வருமானவரித்துறை அலுவலகம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினர் முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தனர்.
ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment