உடனடிச்செய்திகள்

Friday, September 16, 2016

நாளை (செப்டம்பர் 16) - காவிரி உரிமைக்காக.. தமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு! இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை! ஆர்ப்பரித்து எழுகிறது தமிழ்நாடு..!!!


நாளை (செப்டம்பர் 16) - காவிரி உரிமைக்காக..
தமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு!
இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை!

ஆர்ப்பரித்து எழுகிறது தமிழ்நாடு..!!!


இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும், கர்நாடகத் தமிழர்கள் மீது அரசின் ஆதரவோடு நடக்கும் இனவெறி தாக்குதல் உடனே நிறுத்தப்பட வேண்டும், இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் உடைமை இழந்த தமிழ் வணிகர்களுக்கும் தொழில் முனைவோருக்கும்
முழு இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (செப்டம்பர் 16) வெள்ளி அன்று, தமிழ்நாடு தழுவிய அளவில் கடையடைப்புப் போராட்டமும், இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகைப் போராட்டங்களும் நடைபெறுகின்றன. நாளை நடைபெறும் இப்போராட்டத்திற்கு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் என அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகின்றது.
முற்றுகை

------------------
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக் குழு, திரு. பி.ஆர். பாண்டியன் தலைமையிலான தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து, “காவிரி போராட்டக் குழு” என்ற பெயரில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள இந்திய அரசின் வரி வசூல் அலுவலகங்களையும், ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவனங்களையும் முற்றுகையிடும் போராட்டங்களை நடத்துகின்றன.
கடையடைப்பு
-----------------------
திரு. ஏ.எம். விக்கிரமராஜா அவர்கள் தலைமையிலான தமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும், திரு. த. வெள்ளையன் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் என இரு பெரும் வணிகர் சங்கங்களும் இணைந்து கடையடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இந்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை
----------------------------------------------------------------
தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள இந்திய அரசின் உற்பத்தி வரி வசூல் (எக்சைஸ்) அலுவலகம், நாளை (16.09.2016) காலை 10 மணிக்கு காவிரி போராட்டக் குழுவினரால் முற்றுகையிடப்படுகின்றது.
திருவாரூர் வெள்ளைக்குடியில் உள்ள ஓ.என்.ஜி.சி. அலுவலகமும், நாகை மாவட்டம் - நாகூர் பனங்குடியில் உள்ள இந்திய அரசின் பெட்ரோலிய ஆலையும் முற்றுகையிடப்படுகின்றன.
சென்னை
----------------
தலைநகர் சென்னை - நுங்கம்பாக்கம் - ஜெமினி பாலம் அருகில் உள்ள இந்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை (16.09.2016) காலை 10 மணிக்கு நடைபெறுகின்றது.
ஒசூர்
---------
ஓசூரில் காவிரிப் போராட்டக் குழு சார்பில், நாளை (16.09.2016) காலை 10 மணிக்கு, இந்திய அரசின் ஆயுள் காப்பீட்டு கழகத்ததை (LIC) முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகின்றது.
சிதம்பரம்
----------------
கடலூர் மாவட்டம் - சிதம்பரத்தில், தலைமை அஞ்சலகம் முன்பு காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
இது போன்று தமிழ்நாடெங்கும் நாளை இந்திய அரசு அலுவலகங்கள் முன் நடைபெறுகின்ற போராட்டங்களில், தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT