உடனடிச்செய்திகள்

Friday, May 18, 2012

முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம் தெரிவித்து தமிழகமெங்கும் வீரவணக்க நிகழ்வுகள்!

முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம் தெரிவித்து தமிழகமெங்கும் வீரவணக்க நிகழ்வுகள்!


சிங்கள – இந்தியப் பகைவர்களால், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும், மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வையொட்டி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தஞ்சையில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரையாற்றகிறார்.

கோவை
கோவை செட்டிவீதி அசோகன் பகுதியில் நேற்று (17.5.2012) காலை 11 மணியளவில், தமிழ்ச் தேசப் பொதுவுடமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு, தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் பி.சுரேசு தலைமையேற்றார். த.இ.மு கிளைச் செயலாளர் கு.இராசேசுகுமார். த.தே.பொ.க தோழர்கள் இரா.கண்ணன், ம.தலவாய்சாமி, சு.மாரியப்பன் உள்ளிட்ட திரளான தோழர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர்.

சிதம்பரம்
சிதம்பரம் நகரம் தெற்கு சன்னதியில் நேற்று(17.5.2012) மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையேற்றார். தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட திரளான தோழர்களும், உணர்வாளர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர்.

ஓசூர்
ஓசூர் இராம் நகரில் நேற்று(17.5.2012) மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து சிறப்புரையாற்றினார்.

தஞ்சை-நகரம்
தஞ்சை தொடர் வண்டி நிலையத்தில் 18.5.2012 இன்று மாலை 5 மணியளவில், த.தே.பொ.க. சார்பில் நடைபெறவுள்ள நினைவேந்தலுக்கு தோழர் தமிழ்ச்செல்வன் (நகர துணைச் செயலாளர், த.தே.பொ.க.) தலைமையேற்கிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரையாற்றுகிறார்.

செங்கிபட்டி
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி – சாணுரப்பட்டி முதன்மைச்சாலையில், 18.5.2012 இன்று காலை 9 மணியளவில் த.தே.பொ.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. நிகழ்வுக்கு த.தே.பொ.க ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு தலைமையேற்கிறார். த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றுகிறார். தோழர் குழ.பால்ராசு (தஞ்சை மாவட்டச் செயலாளர்), தோழர் ரெ.கருணாநிதி (மாவட்டச் செயற்குழு உறுப்பினர், த.தே.பொ.க.) ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

திருச்சி
திருச்சி தொடர்வண்டி நிலையச் சந்திப்பில் (காதிகிராப்ட் அருகில்) 18.5.2012 இன்று மாலை 6 மணியளவில், த.தே.பொ.க. சார்பில் நடைபெறவுள்ள வீரவணக்க நிகழ்வுக்கு, த.தே.பொ.க. திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமையேற்கிறார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி சிறப்புரையாற்றுகிறார்.

குடந்தை
குடந்தை மேலக்காவேரி அருகில் 18.5.2012 இன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ள வீரவணக்க நிகழ்வுக்கு த.தே.பொ.க. நகரச்செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தலைமையேற்கிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்வினையொட்டி த.தே.பொ.க. கொடியேற்றி தெருமுனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சாமி மலை
சாமி மலை கடை வீதியில் 18.5.2012 இன்று மாலை 6 மணியளவில் நடை பெறவுள்ள நிகழ்வுக்கு தோழர் முரளி (த.தே.பொ.க.) தலைமையேற்கிறார். தோழர் நா.வைகறை (தலைமைச் செயற்குழு உறுப்பினர், த.தே.பொ.க. சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிகழ்வினையொட்டி த.தே.பொ.க. கொடியேற்றி தெருமுனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை 
சென்னை தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலை, நியாயவிலைக் கடை அருகில், 19.5.2012 அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகின்றது. நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமையேற்கிறார். தோழர் க.அருணபாரதி (தலைமைச் செயற்குழு, த.தே.பொ.க), தமிழ்க்கனல்(தாம்பரம் கிளைச் செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். த.தே.பொ.க. தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி நினைவஞ்சலி செலுத்துகின்றனர்.

சென்னை மெரினா

சென்னை மெரினா கடற்கரையில் மே-20 மாலை நடைபெறும் வீரவணக்க நிகழ்வில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு.பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பெ.தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்ளிட்ட பல்வேறு தமிழீழ ஆதரவாளர் அமைப்புத் தலைவர்களும், பொது மக்களும் பங்கேற்கிறார்கள். 


- தலைமைச் செயலகம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT