உடனடிச்செய்திகள்

Friday, February 28, 2025

சீமான் வீட்டில் காவல்துறையினர் வன்முறை மு.க. ஸ்டாலினது திராவிடப் பழிவாங்கல்! பெ. மணியரசன்

சீமான் வீட்டில் காவல்துறையினர் வன்முறை
மு.க. ஸ்டாலினது திராவிடப் பழிவாங்கல்!

பெ. மணியரசன்


தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!
====================================
நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களின் சென்னை நீலாங்கரை இல்லத்தில், நீலாங்கரை காவல்துறையினர் தேவையற்ற நிலையில் வலுக்காட்டாயமாகப் புகுந்து தாக்குதல் நடத்தி, வழக்கமாக வீட்டுக் காவலர்களாகப் பணியில் இருந்த இருவரை இழுத்துக் கொண்டுசென்று, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் வழக்குப் போட்டு, சிறையில் அடைத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது மு.க. ஸ்டாலின் ஆட்சியின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அரசு வழங்கும் அதிகாரத்தைத் தமது சொந்த அரசியல் பழி தீர்த்தலுக்குப் பயன்படுத்தியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
விசயலட்சுமி என்ற நடிகையைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதிகொடுத்து, அவரோடு பழகி, பாலுறவு கொண்டு, பின்னர் அவரைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார் என்பது சீமான் மீதுள்ள வழக்கு. சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மேற்படி விசயலட்சுமி 2011இல் கொடுத்த வழக்கை, 2012இல் சமரசமாகிவிட்டதாகக் கூறி புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை நீக்கிவிடுமாறும் விசயலட்சுமி மனு கொடுத்துவிட்டார்.
இந்த வழக்கு பாலியல் வன்முறை புகார் சார்ந்தது அல்ல. இருவரும் சம்மதித்து பாலுறவு கொண்டிருக்கிறார்கள். இதைப் பாலியல் வல்லுறவு வழக்கு போல் சித்தரிக்கக் கூடாது. உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அவர்கள் இவ்வழக்கு தொடர்பாகக் கூறியுள்ள கருத்துகள் உச்ச நீதிமன்றத்தில் நிற்குமா என்பது ஒருபக்கம். பொது அறிவுக்கு எட்டிய வரையில், மைனர் அல்லாத ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள இருவரும் சம்மதித்து, பாலுறவு கொண்டதைக் குற்றமாகக் கருத முடியாது. திருமணம் செய்யாமல் ஏமாற்றினார் என்பது வேறு வழக்கு. அதிலும் அவ்வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக எழுத்து வடிவிலும் ஊடகங்கள் வழியாகவும் மேற்படி விசயலட்சுமி கூறியபின், அதைப் பயன்படுத்தி காவல்துறையை ஏவி, தி.மு.க. ஆட்சியினர் அட்டூழியம் செய்வது பச்சையான சட்டவிரோதச் செயல்கள்!
காவல்துறையினர் தன் வீட்டுச் சுவரில் ஒட்டிய அழைப்பாணையைக் கிழிப்பது குற்றமல்ல. அது குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்ட தேதியில் நேர்நிற்க வேண்டும் என்பதை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கும் வடிவம். வீட்டில் அழைப்பாணையைப் பெறுவதற்கு ஆள் இல்லாமல் இருந்தாலோ, அல்லது பெறுவதற்கு மறுத்தாலோ அழைப்பாணை ஒட்டப்பட வேண்டும் என்பதுதான் சட்ட நியதி.
அப்போது வீட்டில் இருந்த சீமானின் வாழ்க்கை இணையர் கயல்விழி அவர்கள். அழைப்பாணையைக் கொடுக்க உள்ளே வரவே இல்லை. எதுவும் சொல்லாமல் ஒட்டிவிட்டுச் சென்றனர் என்று ஊடகங்களில் கூறியுள்ளார்.
மு.க. ஸ்டாலின் ஆட்சி தன்னல நோக்கில் அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குடும்பத்தினர், பணியாளர்கள் மீது வன்முறைகளை ஏவுவதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு காவல்துறையின் மேலதிகாரிகள் இதில் தலையிட்டு கீழ்நிலைக் காவல் அதிகாரிகள் நடுநிலையோடு, சட்ட வரம்பிற்குட்பட்டு செயல்பட அறிவுறுத்த வேண்டும். கனடா நாட்டில் உள்ளதுபோல் காவல்துறை, இந்தியாவிலும் தன்னாட்சி பெற்ற (Autonomous body) சட்டம் ஒழுங்கு அமைப்பாக மாற்றப்படவேண்டும். இதுபற்றியும் காவல்துறை மேலதிகாரிகளையும் மனித உரிமை அக்கறையாளர்களும் விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வீட்டுக் காவல் பணியில் இருந்த இருவர் மீது போட்ட வழக்கைக் கைவிட்டு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

 

Wednesday, February 26, 2025

மூன்றாவது மொழியென இந்தியைத் திணிக்கும் இந்திய அரசைக் கண்டித்து சாமிமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்!




மூன்றாவது மொழியென இந்தியைத்
திணிக்கும் இந்திய அரசைக் கண்டித்து
சாமிமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்!


மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் எப்படியாவது திணித்தே தீருவது என முடிவெடுத்து செயல்படுத்தி வரும் ஆரியத்துவ மோடி அரசு, இப்போது “மூன்றாவது மொழி” என்ற பெயரில் இந்தியைக் கொண்டு வர முயல்கிறது. இதனை அம்பலப்படுத்தும் வகையில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் சாமிமலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
கோரிக்கைகள்
=============
1. இந்திய அரசே! இந்திய அரசின் 2020 புதிய கல்விக் கொள்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு மொத்த மாக விலக்குக் கொடு! தமிழ்நாட்டிற்கு உரிய கல்வித் தொகை அனைத்தையும் முழுமையாக - உடனடியாக வழங்கு!
2. இந்தித் திணிப்பை உள்ளடக்கிய மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாகக் கைவிடு! தமிழர்கள் இந்தியைத் தவிர்த்துவிட்டு, தென்னாட்டு மொழிகளில் ஒன்றை மூன்றாவது மொழியாகக் கல்வியில் ஏற்க வேண்டும் என்று நயவஞ்சகமாகக் கூறி, இந்தித் திணிப்பிற்கு இன்னொரு வாசலைத் திறக்காதே!
3. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாநில அதிகாரப்பட்டியலில் இருந்த கல்வியை, சர்வாதிகாரி இந்திராகாந்தி 1976-இல் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து இந்திய அரசின் மேலாதிக்கம் உள்ள பொதுப்பட்டிய(Concurrent List)லுக்கு மாற்றினார். அதை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டுவா!
4. உயர் கல்வியில் ஆதிக்கம் செலுத்தி, மாநில அரசுக்கு மிஞ்சியுள்ள கல்வி அதிகாரத்தையும் பறிக்கின்ற பல்கலைக் கழக மானியக் குழுவை (UGCயை) நிரந்தரமாகக் கலைத்திடு! பல்கலைக் கல்விக்கென அனைத்து மாநிலக் கல்விப் பேராளர்களைக் கொண்ட பரிந்துரைக்குழு அமைத்திடுக!
5. இந்திய அரசின் ஒரே ஆட்சி மொழி இந்தி மொழியே எனக் கட்டளை இடும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 343-ஐயும் அதன் தொடர்புடைய உறுப்புகளையும், அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவந்து முற்றிலுமாக நீக்கு. உலகின் மற்ற கூட்டாட்சி நாடுகளில் இருப்பதுபோல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள - தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்கு!
6. தமிழ்நாடு அரசே, தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கையை அறிவித்திடு!
இன்று (28.02.2025) மாலை 6 மணிக்கு சாமிமலை பெரிய கடைவீதியில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வை தமிழ்த்தேசியப் பேரியக்க கிளைச் செயலாளர் தோழர் க.தீந்தமிழன் தலைமையேற்று நடத்தினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை தலைமை செயற்குழு உறுப்பினர் க.விடுதலைச்சுடர் தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் பா.திருஞானம் கண்டன உரையாற்றினார். குடந்தை மாநகரச் செயலாளர் ச.செழியன் திருவலஞ்சுழி கிளைச் செயலாளர்,
அ.ச இராசேந்திரன் சாமிமலை பேரியக்க தோழர்கள் த.சிவக்குமார் க.இரஞ்சித்குமார் , லோ.பாக்கியராஜ் முன்னிலை வகித்தனர். தோழர் பாரதிதாசன் நன்றி கூறினார்.
பேரியக்கத் தோழர்கள் கதிரவன் பொன்னுசாமி,ஆதி.கலியப்பெருமாள் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் உழவர்கள் கலந்து கொண்டனர்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

 

தமிழ்த்தேசிய நாள் சிறப்புப் பொதுக்கூட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்றது





 



தமிழ்த்தேசிய நாள்
சிறப்புப் பொதுக்கூட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்றது



தமிழ்த் தேசியப் நாளை முன்னிட்டு திருவள்ளுவராண்டு 2056 மாசி 13. (25.02.2025) செவ்வாய்கிழமை மாலை 06.00 மணி சானூரப்பட்டி முதன்மை சாலை (செங்கிப்பட்டி) நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்திற்கு பூதலூர் ஒன்றிய செயலாளர் தோழர் பி. தென்னவன் தலைமை தாங்கினார்
தோழர்கள்,க. காமராசு, ச. அருள்தாசு, வெ.ப. மாரிமுத்து,ச. செபஸ்தியார்,
அ. சுரேஷ் முன்னிலை வகித்தனர்
தோழர் பழ.மலைத்தேவன் வரவேற்பு உரையாற்றினார்.
முகவரி தேடி என்ற தலைப்பில்
பாவலர்கள்: கவி பாஸ்கர், மூ.த.கவித்துவன், சே.மணியரசன், மா.புண்ணியமூர்த்தி பாவீச்சு நிகழ்த்தினர் .
தோழர்கள் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் துணைத் தலைவர் க.செம்மலர் பூதலூர் ஒன்றிய குழு தோழர் ரெ.கருணாநிதி உரை நிகழ்த்தினார்.
தலைமை செயற்குழுப் உறுப்பினர்கள் பழ. இராசேந்திரன், க.விடுதலைச்சுடர், வே.க.இலக்குவன், தஞ்சை மாநகரச் செயலாளர் லெ. இராமசாமி, தஞ்சை மாவட்டம் செயற்குழுப் உறுப்பினர்
கோ. பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
நிறைவுரை
) தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் நிறைவுரையாற்றினர்
ஒன்றியக்குழு, தோழர் பெ.ஆனந்த நன்றியுரையாற்றினர்
பறையாட்டம், சிறுவர் சிறுமியர் சிலம்பாட்டம் எழுச்சியாக நடைபெற்றது. சிலம்பாட்டம் செய்த சிறுவர் சிறுமியர் ஐயா பெ.மணியரசன் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் , காவிரி உரிமை மீட்புப்குழு ,பொறியாளர் செந்தில்வேலன் வெள்ளம் பெரம்பூர் இரமேசு கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் .
பேரியக்கத் தோழர்கள்,ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

இந்தியைத் திணிக்காதே..!மும்மொழிக் கொள்கையைக் கைவிடு எனும் கோரிக்கை முழக்கத்தோடு கண்டன ஆர்ப்பாட்டம் ஓசூர் நடைபெற்றது.

 


இந்தியைத் திணிக்காதே..!மும்மொழிக் கொள்கையைக் கைவிடு எனும் கோரிக்கை முழக்கத்தோடு கண்டன ஆர்ப்பாட்டம்
ஓசூர் நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் இராம்நகரில் தமிழ்த்தேசிய நாளான இன்று 25/02/25 காலை 10 மணிக்கு எழுச்சியுடன் நடைபெற்றது..!
ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பே பத்தலப்பள்ளி கிளைச் செயலாளர் தோழர் அ.வனமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஜோக்கிம் அவர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பிட த.தே.பே இராயக்கோட்டை பகுதி செயலாளர் தோழர் செ.இலட்சுமணன் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து அவர்கள் கண்டன நிறைவுறையாற்றினார்.

மூன்றாவது மொழியென இந்தியைத் திணிக்கும் இந்திய அரசைக் கண்டித்து திருச்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

 


மூன்றாவது மொழியென இந்தியைத்
திணிக்கும் இந்திய அரசைக் கண்டித்து
திருச்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருச்சி தொடர்வண்டிச் சந்திப்பு அருகில் உள்ள காதி கிராஃப்ட் முன்பு "இந்திய அரசே! மூன்றாவது மொழியான இந்தியைத் திணிக்காதே!
கல்வியை முற்றிலுமாக மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவா" என்ற முழக்கத்தை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் வே.க.இலக்குவன் தலைமை ஏற்றார். தோழர் மு.தியாகராசன் ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் நா. இராசா ரகுநாதன், மூ.த.கவித்துவன், வே.பூ.இராமராசு, கேச.இனியன், ஐயா அ.மனுவேல் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் ஐயா ம.ப.சின்னத் துரை, மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் தலைவர் திரு பஷீர், பைந்தமிழ் இயக்கத்தின் இயக்குநர் புலவர் ஐயா தமிழாளன், உலகத் தமிழ்க் கிறித்தவர் அமைப்பின் திருச்சி பொறுப்பாளர் திரு பாரி மன்னன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் திருவெறும்பூர் கிளைச் செயலாளர் தோழர் அழகர்சாமி, ஐயா சத்தியமூர்த்தி தோழர்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகேசன், வேதமுத்து, தமிழரசன், திருமதி யோகாம்பாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மூன்றாவது மொழியென இந்தியைத் திணிக்கும் இந்திய அரசைக் கண்டித்து பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

 



மூன்றாவது மொழியென இந்தியைத்
திணிக்கும் இந்திய அரசைக் கண்டித்து
பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!


மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் எப்படியாவது திணித்தே தீருவது என முடிவெடுத்து செயல்படுத்தி வரும் ஆரியத்துவ மோடி அரசு, இப்போது “மூன்றாவது மொழி” என்ற பெயரில் இந்தியைக் கொண்டு வர முயல்கிறது. இதனை அம்பலப்படுத்தும் வகையில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பெண்ணாடத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
கோரிக்கைகள்
=============
1. இந்திய அரசே! இந்திய அரசின் 2020 புதிய கல்விக் கொள்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு மொத்த மாக விலக்குக் கொடு! தமிழ்நாட்டிற்கு உரிய கல்வித் தொகை அனைத்தையும் முழுமையாக - உடனடியாக வழங்கு!
2. இந்தித் திணிப்பை உள்ளடக்கிய மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாகக் கைவிடு! தமிழர்கள் இந்தியைத் தவிர்த்துவிட்டு, தென்னாட்டு மொழிகளில் ஒன்றை மூன்றாவது மொழியாகக் கல்வியில் ஏற்க வேண்டும் என்று நயவஞ்சகமாகக் கூறி, இந்தித் திணிப்பிற்கு இன்னொரு வாசலைத் திறக்காதே!
3. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாநில அதிகாரப்பட்டியலில் இருந்த கல்வியை, சர்வாதிகாரி இந்திராகாந்தி 1976-இல் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து இந்திய அரசின் மேலாதிக்கம் உள்ள பொதுப்பட்டிய(Concurrent List)லுக்கு மாற்றினார். அதை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டுவா!
4. உயர் கல்வியில் ஆதிக்கம் செலுத்தி, மாநில அரசுக்கு மிஞ்சியுள்ள கல்வி அதிகாரத்தையும் பறிக்கின்ற பல்கலைக் கழக மானியக் குழுவை (UGCயை) நிரந்தரமாகக் கலைத்திடு! பல்கலைக் கல்விக்கென அனைத்து மாநிலக் கல்விப் பேராளர்களைக் கொண்ட பரிந்துரைக்குழு அமைத்திடுக!
5. இந்திய அரசின் ஒரே ஆட்சி மொழி இந்தி மொழியே எனக் கட்டளை இடும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 343-ஐயும் அதன் தொடர்புடைய உறுப்புகளையும், அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவந்து முற்றிலுமாக நீக்கு. உலகின் மற்ற கூட்டாட்சி நாடுகளில் இருப்பதுபோல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள - தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்கு!
6. தமிழ்நாடு அரசே, தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கையை அறிவித்திடு!
நேற்று (25.02.2025) மாலை 04.30 மணிக்கு பெண்ணாடம் அருகேயுள்ள முருகன்குடி, மேட்டுத்தெருவில் தமிழ்த்தேசிய நாளை முன்னிட்டு பேரியக்கக் கொடியினை பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் அவர்கள் ஏற்றினார்.
பிறகு மாலை 05.00
மணியளவில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வை தமிழ்த்தேசியப் பேரியக்க நல்லூர் ஒன்றியச் செயலாளர் தோழர் சி. பிரகாசு தலைமையேற்று நடத்தினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன், மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் தோழர் அ. செந்தமிழ்ச்செல்வி , நல்லூர் ஒன்றியத் தலைவர் தொழர் அரா. கனகசபை, தோழர் பெ. ந. லெட்சுமணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மகளிர் ஆயம் பொருளாளர் தோழர் ம. கனிமொழி, மு. வித்யா, சு. சிலம்புச்செல்வி, க. இந்துமதி, இளமதி, பேரியக்கத் துணைத்தலைவர் தோழர் க. முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மா. மணிமாறன் தோழர்கள் காமராசு, பாலா, அ.சுப்ரமணியராஜா, அறிவுச்செல்வன், ஞானப்பிரகாசம், சசிகுமார், சிலம்பரசன், திருக்குறள் ஞானமன்ற நிறுவனர் திரு. அஞ்சை. இராவணன் மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

Tuesday, February 25, 2025

"மூன்றாவது மொழி" - "முகமூடி அணிந்து இந்தி"விழித்தெழுவீர் விரட்டுவீர்! மதுரை கண்டனப் பொதுக்கூட்டம்

 





"மூன்றாவது மொழி" - "முகமூடி அணிந்து
இந்தி"விழித்தெழுவீர் விரட்டுவீர்!

மதுரை கண்டனப் பொதுக்கூட்டம்



"மூன்றாவது மொழி" - "முகமூடி அணிந்து இந்தி"விழித்தெழுவீர்! விரட்டுவீர்! என்ற தலைப்பில் கண்டனப் பொதுக்கூட்டம் மதுரை பெத்தானியாபுரத்தில் 25.02.2025 செவ்வாய் மாலை 7.00 மணியளவில் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து பேரியக்கத் தோழர்கள் பா. மலையரசன், விசு கரிகாலன், ரெ. இராசு, மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா, மாவட்ட அமைப்பாளர் இரா. இளமதி, பே. மேரி, புரட்சிக் கவிஞர் பேரவை தோழர் முருகன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சு. அருணாசலம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவாக மதுரை மாநகர் செயலாளர் தோழர் கதிர்நிலவன் நிறைவுறையாற்றினார்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT