மூன்றாவது மொழியென இந்தியைத்
திணிக்கும் இந்திய அரசைக் கண்டித்து
சாமிமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் எப்படியாவது திணித்தே தீருவது என முடிவெடுத்து செயல்படுத்தி வரும் ஆரியத்துவ மோடி அரசு, இப்போது “மூன்றாவது மொழி” என்ற பெயரில் இந்தியைக் கொண்டு வர முயல்கிறது. இதனை அம்பலப்படுத்தும் வகையில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் சாமிமலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
கோரிக்கைகள்
=============
1. இந்திய அரசே! இந்திய அரசின் 2020 புதிய கல்விக் கொள்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு மொத்த மாக விலக்குக் கொடு! தமிழ்நாட்டிற்கு உரிய கல்வித் தொகை அனைத்தையும் முழுமையாக - உடனடியாக வழங்கு!
2. இந்தித் திணிப்பை உள்ளடக்கிய மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாகக் கைவிடு! தமிழர்கள் இந்தியைத் தவிர்த்துவிட்டு, தென்னாட்டு மொழிகளில் ஒன்றை மூன்றாவது மொழியாகக் கல்வியில் ஏற்க வேண்டும் என்று நயவஞ்சகமாகக் கூறி, இந்தித் திணிப்பிற்கு இன்னொரு வாசலைத் திறக்காதே!
3. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாநில அதிகாரப்பட்டியலில் இருந்த கல்வியை, சர்வாதிகாரி இந்திராகாந்தி 1976-இல் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து இந்திய அரசின் மேலாதிக்கம் உள்ள பொதுப்பட்டிய(Concurrent List)லுக்கு மாற்றினார். அதை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டுவா!
4. உயர் கல்வியில் ஆதிக்கம் செலுத்தி, மாநில அரசுக்கு மிஞ்சியுள்ள கல்வி அதிகாரத்தையும் பறிக்கின்ற பல்கலைக் கழக மானியக் குழுவை (UGCயை) நிரந்தரமாகக் கலைத்திடு! பல்கலைக் கல்விக்கென அனைத்து மாநிலக் கல்விப் பேராளர்களைக் கொண்ட பரிந்துரைக்குழு அமைத்திடுக!
5. இந்திய அரசின் ஒரே ஆட்சி மொழி இந்தி மொழியே எனக் கட்டளை இடும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 343-ஐயும் அதன் தொடர்புடைய உறுப்புகளையும், அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவந்து முற்றிலுமாக நீக்கு. உலகின் மற்ற கூட்டாட்சி நாடுகளில் இருப்பதுபோல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள - தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்கு!
6. தமிழ்நாடு அரசே, தமிழ்நாட்டிற்கென தனி கல்விக் கொள்கையை அறிவித்திடு!
இன்று (28.02.2025) மாலை 6 மணிக்கு சாமிமலை பெரிய கடைவீதியில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வை தமிழ்த்தேசியப் பேரியக்க கிளைச் செயலாளர் தோழர் க.தீந்தமிழன் தலைமையேற்று நடத்தினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை தலைமை செயற்குழு உறுப்பினர் க.விடுதலைச்சுடர் தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் பா.திருஞானம் கண்டன உரையாற்றினார். குடந்தை மாநகரச் செயலாளர் ச.செழியன் திருவலஞ்சுழி கிளைச் செயலாளர்,
அ.ச இராசேந்திரன் சாமிமலை பேரியக்க தோழர்கள் த.சிவக்குமார் க.இரஞ்சித்குமார் , லோ.பாக்கியராஜ் முன்னிலை வகித்தனர். தோழர் பாரதிதாசன் நன்றி கூறினார்.
பேரியக்கத் தோழர்கள் கதிரவன் பொன்னுசாமி,ஆதி.கலியப்பெருமாள் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் உழவர்கள் கலந்து கொண்டனர்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================
Post a Comment