உடனடிச்செய்திகள்

Tuesday, February 25, 2025

"மூன்றாவது மொழி" - "முகமூடி அணிந்து இந்தி"விழித்தெழுவீர் விரட்டுவீர்! மதுரை கண்டனப் பொதுக்கூட்டம்

 





"மூன்றாவது மொழி" - "முகமூடி அணிந்து
இந்தி"விழித்தெழுவீர் விரட்டுவீர்!

மதுரை கண்டனப் பொதுக்கூட்டம்



"மூன்றாவது மொழி" - "முகமூடி அணிந்து இந்தி"விழித்தெழுவீர்! விரட்டுவீர்! என்ற தலைப்பில் கண்டனப் பொதுக்கூட்டம் மதுரை பெத்தானியாபுரத்தில் 25.02.2025 செவ்வாய் மாலை 7.00 மணியளவில் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து பேரியக்கத் தோழர்கள் பா. மலையரசன், விசு கரிகாலன், ரெ. இராசு, மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா, மாவட்ட அமைப்பாளர் இரா. இளமதி, பே. மேரி, புரட்சிக் கவிஞர் பேரவை தோழர் முருகன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சு. அருணாசலம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவாக மதுரை மாநகர் செயலாளர் தோழர் கதிர்நிலவன் நிறைவுறையாற்றினார்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT