உடனடிச்செய்திகள்

Monday, December 5, 2011

கொள்கையற்ற ஒற்றுமை குழப்பத்தில் முடியும் – துபாயில் பெ.மணியரசன் பேச்சு.

கொள்கையற்ற ஒற்றுமை குழப்பத்தில் முடியும் – துபாயில் பெ.மணியரசன் பேச்சு..

 

கொள்கையற்ற ஒற்றுமை குழப்பத்தில் முடியும் என்று தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் கூறினார். துபாய் சிவாஸ்டார் அரங்கத்தில் 3-12-2011 மாலை தமிழர் பண்பட்டு நடுவம் நடத்திய கூட்டத்தில் பேசும்போதே இவ்வாறு கூறினார். இலண்டனில் ஈழத்தமிழர்கள் நடத்திய பண்பாட்டு கருத்தரங்கம் மற்றும் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டங்களில் கலந்துகொண்டு விட்டு தமிழகம் திரும்பும் வழியில் துபாயில் இக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இக்கூட்டதிற்குத் தோழர் சிவா தலைமையேற்றார். திருவாளர்கள் சங்கமம் தொலைக்காட்சியின் உரிமையாளர் கலையன்பன், கவிஞர் கவிமதி, யுஏ, தமிழர் அரங்கத்தின் பிரேம் ஆகியோர் தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தி பேசினர். இந்நிகழ்வில் முன்னதாக திரு. சிவகுமார் அவர்கள் வரவேற்று பேசினார். இறுதியாக தோழர் பட்டணம் மணி அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

நிறைவில் பேசிய தோழர் மணியரசன் பின்வரும் கருத்துக்களை வலியுறுத்தினார்.
ஐந்து கண்டங்களிலும் பத்து கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். நமக்கு இறையாண்மையுள்ள சொந்த அரசு எங்கும் இல்லாததால்தான் உலக அரசியலில் நம்மால் எந்தப் பாத்திரமும் வகிக்க முடியவில்லை. உலக நாடுகளும் நமது துன்ப துயரங்களைக் கண்டுகொள்வது இல்லை.

ஈழத்தில் 2008-2009 ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்ட போது அதைத் தடுத்து நிறுத்த எந்த நாடும் முன்வரவில்லை. அதே வேளை ஒன்றரைக்கோடி மக்கள்தொகை மட்டுமே கொண்ட சிஙகளர்களுக்கு ஓர் அரசு இருப்பதால் இந்தியா, சீனா, இரசியா போன்ற பெரும் பெரும் நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இலங்கை அரசு நடத்திய தமிழின அழிப்புப் போருக்கு துணை செய்தன.

இந்த நிலையில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களுக்குள் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு நாம் ஒரு சர்வதேசியமாக செயல்பட வேண்டும். ஒரு நாட்டில் தமிழர்களுக்கு இன்னல் நேர்ந்தால் மற்ற அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்கள் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க வேண்டும்இ போராட வேண்டும்.

இங்கு பேசிய நண்பர்கள் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்று கூறினார்கள். அது நல்ல நோக்கம் கொண்ட கருத்துதான். ஆனால் அடைய வேண்டிய இலக்கில் ஒற்றுமை இல்லாமல் ஏற்படும் அமைப்புகளின் ஒற்றுமை நல்ல பலன்களைத் தருவதற்கு மாறாக குழப்பத்தையே உருவாக்கும். செல்லும் திசை வழி பற்றி ஒத்த கருத்து இல்லாமல் பெரும் கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகக் கூடிக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. அவ்வாறான பெரும் கூட்டம் நமக்கு ஏற்பட்ட உரிமை இழப்புகள் குறித்தும் ஈழத்தமிழர் பேரழிவு குறித்தும் ஒப்பாரி வைத்துக்கொள்ள மட்டுமே பயன் படுகின்றன. இவற்றிற்கான தீர்வை நோக்கி திசை வழியை தீர்மானிக்க அது பயன்படவில்லை.

இணையத் தளங்கள் இன்றைக்கு பெரும் பெரும் நிறுவனங்கள் நடத்தும் ஊடகங்களுக்கு மற்றாகஇ அதிகாரத்தில் இல்லதவர்களின் குரலை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகு ஊடகங்களாக செயல் படுகின்றன. துனீசியஇ எகிப்து சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக மக்களைத் திரட்டியதில் இணையத் தளங்கள் பெரும் பங்கு வகித்தன. நம்முடைய இளைஞர்களும் ஊடகங்களை நன்கு பயன் படுத்தி வருகின்றனர்.

இணையத்தளங்களில் தங்கள் கருத்துக்களை எழுதிக்கொள்ள வாய்ப்பு இருப்பதால் சிலர் அதை பொழுதுபோக்குக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். வேறு சிலர் இணையதளங்களில் எழுதுவதை மட்டுமே தங்களின் ஒரே பணியாகக் கொண்டுள்ளனர். இன்னும் சிலர் இணையத்தளங்களில் தாங்கள் எழுதுவதை வைத்துக்கொண்டு தன்னைத்தானே ஒரு நிறுவனமென்றும் தன்னைத்தானே ஒரு இயக்கமென்றும் கருதிக் கொள்கின்றனர். இப்போக்கு ஒரு இலட்சியத்தை நோக்கி ஒத்த கருத்துள்ளவர்களோடு சேர்ந்து செயல்படாமல்இ ஒதுங்கிக் கொண்டு விமர்சனம் மட்டும் கூறும் உதிரிப் போக்காகவே அமையும் என்று பேசினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் நிறைவான கருத்துக்களோடு விடை பெற்றனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT