முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்பில், மலையாளிகளை
வெளியேறக்கோரி சென்னையில் ஆலுக்காஸ் நகை மாளிகை முன் தோழர் க.அருணபாரதி, தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக சிறையிலடைக்கப்பட்ட
த.தே.பொ.க தோழர்கள் 6 பேர் மீது 9.12.2011 அன்று புதிதாக ஒரு வழக்குப்
போட்டு சிறையிலிருந்து அவர்களை சைதாப்பேட்டை நீதி மன்றத்திற்குக் கொண்டு வந்து
சிறைக்காவல் ஆணைப்பெற்றனர்.
சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மலையாளிக் கடையை அதே
7.12.2011 அன்று மேற்கண்ட 6 பேரும் தாக்கிச் சூறையாடியதாகவும், அக்கடைச்
சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகவும், அடித்துக்காயம் உண்டாக்கியதாகவும் கொலை
மிரட்டல் விட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டி, மீண்டும் சிறையில்
அடைத்தனர். சைதாப்பேட்டைக் காவல் நிலையத்தில் போட்டுள்ள இவ்வழக்கு முழுக்கப்
பொய்யானது. வேண்டுமென்றே காவல்துறையினரால் புனையப்பட்டது என்று வழக்கறிஞர்
சேசுபாலன்ராஜா தலைமையினான வழக்கறிஞர் குழு , 14.12.2012 எழும்பூர்
நீதிமன்றத்திலும், சைதை நீதி மன்றத்திலும் வாதிட்டது.
இதன் அடிப்படையில் த.தே.பொ.க. தோழர்கள்
நிபந்தனையில் விடுதலை ஆனார்கள். புழல் நீதிமன்றத்தில் வெளியே த.தே.பொ.க.
தோழர்களும், திரளான உணர்வாளர்களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
.
Post a Comment