உடனடிச்செய்திகள்

Wednesday, December 7, 2011


முல்லைப்பெரியாறு அணை உரிமையை மறுக்கும் மலையாளிகளை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவோம்

 பரப்புரை போராட்டம் நடத்திய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் கைது...


7.12.2011 காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சித் தோழர்கள் ’’முல்லை பெரியாறு உரிமை மறுக்கும் மலையாளியே தமிழகத்தை விட்டு வெளியேறு என்ற ஆவேச முழக்கத்துடன் பரப்புரை- போராட்டம் நடத்தினர்.

பொதுமக்களிடம் உண்மையை விளக்கும் துண்டறிக்கைகளை வழங்கி மலையாளிகளின் நிறுவனங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க தோழர்கள் கைது செயப்பட்டுள்ளனர்

சென்னை:

சென்னை தியாகராயர் நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தை நோக்கி முழக்கங்கள் எழுப்பிக்கொண்டு சென்ற கட்சியின் தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி மற்றும். தமிழ்ச்சமரன், தமிழ்க்கனல், பால் முருகன், ஆவடிகண்ணன், வெற்றித்தமிழன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டம் காரணமாக அந்நிறுவனத்தின் வெளிக்கதவு சாத்தப்பட்டது. காவல் துறையினர் பெறும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். தியாகராயர் நகர் எங்கும் பரபரப்பு. நடத்த வேண்டிய போராட்டம் தான் என்று அப்பகுதியிலிருந்த பொது மக்கள் ஆதரவு தெரிவித்தனர்

கோவை:

கோவையில் தமிழ்த் தேசப்பொது வுடைமைக்கட்சியின் கிளைச் செயலாளரும் தமிழக இளைஞர் முன்னணியின் மாநகரச் செயலாளருமான தோழர் பா.சங்கர் தலைமையில் த.தே.பொ.க தோழர்கள் காந்திபுரம் கிரசஸ்கட் சாலையில் மலையாளிகளை வெளியேற்றுவோம் என்ற முழகத்ததோடு ஆர்ப்பாட்டம் செய்து துண்டறிக்கைகள் வழங்கினர். மலையாளிகள் கடைகள் தாக்கப்பட்டதாக த.தே.பொ.க வினர் 16 பேர் கைது செய்யப்பட்டனர்

இப்போராட்டத்தால் அச்ச மடைந்த ஜாய் ஆலுக்காஸ், பிரின்ஸ் ஆலுக்காஸ் ஜோசப் ஆலுக்காஸ், கஜானா, முத்துட், மணப்புரம் கோல்டு, உள்ளிட்ட மலையாளிகளின் நகை நிறுவனங்களும் காந்தி புரத்தைச் சுற்றியுள்ள பெருமளவிலான மலையாளிகளின் ரொட்டி கடைகளும், தேனிர் கடைகளும் மூடப்பட்டன.

ஒசூர்:

ஓசூர் விடியற்காலையிலிருந்தே ஓசூர் த.தே.பொ.க வினர் கட்சியின் தலைமை செயற்குழு உறுபினர் கோ.மாரிமுத்து தலைமையில் அசோக் லைலாண்ட், டைட்டான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வாயில்களில் விளக்கவுரை நிகழ்த்தி துண்டறிக்கைகள் வழங்கி பரப்புரை செய்த பின் ஓசூர் நகர கடை வீதிகளில் பரப்புரை செய்து  மலையாள ஆலுக்காஸ் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகை மாளிகையை தாக்கி சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி காவல் துறையினர் 12 தோழர்களை கைது செய்தனர்

தஞ்சை:

கட்சியின் தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இராசு முனியாண்டி தலைமையில் த.தே.பொ.க தோழர்கள் பரப்புரை மேற்கொண்டனர்.

மலையாளிகளின் நிறுவனங்களான முத்தூட் பைனானாஸ், ராயல் காபி கடை உள்ளிட்டவை தாக்கப்பட்டதாக த.தே.பொ,க தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல்றையினர் தேடி வருகின்றனர்.

தொலைக்காட்சி நேர்காணல் அளிக்க சென்ற த.தே.பொ.க தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் ஆகியோர் முன்னெச்சரிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்

குடந்தை

த.தே.பொ.க குடந்தை நகரச்செயலாளர் விடுதலை சுடர் தலைமையில் ஆலுக்காஸ் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலூக்காஸ் நகை நிறுவனம் தாக்கி சேதப்படுத்தப்பட்டதாக தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 1/2 லட்சம் சொத்துக்கள் சேதமடைந்தாக ஆலுக்காஸ் நிறுவனத்தினர் புகார் கொடுத்தன் அடிப்படையில் தனியார் சொத்துக்கள் சேத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் த.தே.போ.க வினர் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நேரில் சென்று கைதுக்கு கண்டனம் தெரிவித்ததோடு போராடிய த.தே.பொ.க தோழர்களுக்கு  வாழ்த்துகள் தெரிவித்தனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT