உடனடிச்செய்திகள்

Saturday, December 3, 2011

தமிழகத்திலிருந்து மலையாளிகளை வெளியேற்றுவோம் - கி.வெங்கட்ராமன் பேச்ச!

முல்லைப் பெரியாறு அணையை

உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை வெளியேற்றுவோம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் பேச்சு!

 

தமிழகத்திற்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை தமிழகத்திலிருந்து வெளியெற்றுவொம் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், மதுரையில் இன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

 

"முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம்" என வலியுறுத்தி, இன்று(03.12.2011) மாலை, மதுரை காளவாசல் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கு அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமை தாங்கினார். முல்லைப் பெரியாறு அணை நீரால் பாசன வசதி பெறும் உழவர் அமைப்புத் தலைவர்கள் கட்டக்குளம் இராமசாமி, வாடிப்பட்டி தேவராசன், நடராசன், பெரியசாமி மற்றும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய இயக்கம் அமைப்பாளர் எம்.ஆர்.மணிக்கம், கதிர்நிலவன்(த.தே.வி.இ.), மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், நாயகம் (இயற்கை பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் இதில் கலந்து கொண்டு மலையாளிகளின் உரிமை மறுப்புக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.

 

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், "நேற்று கேரள அரசின் தலைமை வழக்கறிஞர் தண்டபாணி கேரள உயர்நீதி மன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் இல்லையென்றும், ஒருவேளை அணை உடைந்தாலும் அத்தண்ணீர் முழுவதையும் முல்லை பெரியாறு அணைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை உள்வாங்கிக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். அணை பலவீனமடைந்திருப்பதாக அச்சம் ஏற்படுத்தும் பரைப்புரையை ஊடகங்கள் தான் செய்கின்றன என்றும் அவர் கூறினார். இது தான் உண்மை நிலை.

 

ஊடகங்கள் மட்டுமின்றி, இதற்கு நேர் மாறாக காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யுனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தமிழனப்பகை வெறியைப் பரப்புகின்றன. முல்லைப் பெரியாறு அணையை விட இடுக்கி அணையின் கொள்ளளவு 7 மடங்கு பெரியது. எனவே எந்த நிலையிலும் அங்கு அச்சப்படுவதற்கு அடிப்படையே இல்லை. வேண்டுமென்றே தமிழினப் பகைப் பரப்புரை கேரளத்தில் நடக்கிறது.

 

கேரளத்தின் அடிப்படை உணவுத்தேவையை தமிழகமே நிறைவு செய்கிறது. நாள் தோறும் 700 டன் அரிசி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்கிறது. கேரளத்தின் முழு இறைச்சித்  தேவையையும், காய்கறி, முட்டை ஆகியவற்றின் தேவையையும் தமிழ்நாடு தான் நிறைவு செய்கிறது. நெய்வேலி இரண்டாம் அனல் மின்நிலையத்திலிருந்து நாள்தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்திலிருந்து கேரளா செல்கின்றது. தமிழ்நாட்டில் வாழும் 30 இலட்சம் மலையாளிகள் வணிக அரசர்களாகவும், உயர் பதவிகளிலும் கோலோச்சுகிறார்கள். ஆனால், இதற்கான நன்றியுணர்ச்சி சிறிதும் இல்லாமல் தமிழினப் பகையோடு மலையாளிகள், முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து தமிழ்நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.

 

 

இன்று மாலை குமுளியில் தமிழர்களின் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. இது தொடருமேயானால், தமிழகத்திலிருந்து மலையாளிகள் அனைவரையும் வெளியெற்றும் போராட்டத்தை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் கேரளத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்து பொருள் போக்குவரத்தை முடக்க வேண்டும். நெய்வேலி மின்சாரம் கேரளாவிற்கு செல்வதைத் தடுக்க வேண்டும். தமிழர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை" என்று பேசினார்.

 

பெருந்திரள் உழவர்களும், உணர்வாளர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், சித்திரை தானி ஓட்டுநர் சங்கச் செயலாளர் தோழர் பா.இராசேந்திரன் நன்றியுரை நிகழ்த்தினார். 


PUTHIYATHENRAL said...

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT