கிருட்டிணகிரியில் 11.11.2012 அன்று நடைபெறவுள்ள
தமிழகப் பெருவிழா நிகழ்வு!
1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள்
தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைக்கப்பட்ட நாள். தமிழ்நாடு இழந்த பகுதிகளை
மீட்கவும், தமிழகத்திலுள்ள பகுதிகளை இழக்காமல் காக்கவும் உறுதியேற்கும் வகையில் அந்நாளை
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகப் பெருவிழா நிகழ்வாக ஆண்டுதோறும் கொண்டாடி
வருகின்றது.
இவ்வாண்டு, தமிழ்த் தேசப்
பொதுவுடைமைக் கட்சியும், தமிழக இளைஞர் முன்னணியும் இணைந்து, 11.11.2012 ஞாயிறு
அன்று மாலை, கிருட்டிணகிரி ஐந்து சாலை இவ்விழாவை நடத்துகின்றன. அன்றைய தினத்தில், பேரணி,
கலை நிகழ்ச்சி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறுகின்றது.
11.11.2012 அன்று மாலை 4.30
மணியளவில், மொரப்பூர் பாரதி கிராமியக் கலைக்குழுவினரின் சுழன்றடிக்கும்
தப்பாட்டத்துடன் தொடங்கும் தமிழர் எழுச்சிப் பேரணியில் தப்பாட்டம், கரகாட்டம்,
ஒயிலாட்டம், மான்கொம்பு, கோலாட்டம் உள்ளிட்ட தமிழர்களின் கலை வடிவங்கள்
இடம்பெறுகின்றன. தோழர் வ.பாண்டியன் பேரணிக்குத் தலைமையேற்கிறார். ஆசிரியர்
சி.மாணிக்கம் தொடங்கி வைக்கிறார்.
மாலை 5.30 மணியளவில் நடைபெறும்
பொதுக்கூட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர்
பெ.ஈசுவரன் தலைமையேற்கிறார். த.இ.மு. துணை அமைப்பாளர் தோழர் இரா.விஜய் வரவேற்புரையாற்றுகிறார்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித்
தலைவர் தோழர் பெ.மணியரசன், “சந்தனக்காடு” இயக்குநர் வ.கௌதமன், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்
தோழர் கோ.மாரிமுத்து, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் தோழர் இரா.முருகேசன் ஆகியோர்
உரைவீச்சு நிகழ்த்துகின்றனர். தோழர்கள் ம.கலையரசன், பெ.செகதீசுவரி, ஜோ.சீனிவாசன், செ.சின்ராசு
ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிகின்றனர். த.இ.மு. காட்டூர் கிளைச் செயலாளர் தோழர்
இரா.குணசேகரன் நன்றி நவில்கிறார்.
இந்நிகழ்வில், தமிழ்த் தேசப்
பொதுவுடைமைக் கட்சி, தமிழக இளைஞர் முன்னணித் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும்
திரளாக பங்கேற்க வேண்டுமென த.தே.பொ.க. தலைமைச் செயலகம் அன்புடன் வேண்டிக் கேட்டுக்
கொள்கிறது. நிகழ்வு குறித்தான தொடர்புக்கு:
99429 27947, 9659360967, 99437 0946.
Post a Comment