உடனடிச்செய்திகள்

Wednesday, February 13, 2013

ஐ.நா. அலுவலக முற்றுகைப் போராட்டம்


ஐ.நா. அலுவலக முற்றுகைப் போராட்டம்

தமிழீழ இனப்படுகொலையில் பங்காற்றிய ஐ.நா.வின் கொடுஞ்செயல்கள் அம்பலமானத்தைத் தொடர்ந்து, நேற்று(12.02.2013) சென்னை அடையாறிலுள்ள ஐ.நா. - யுனிசெப் அலுவலக முற்றுகைப் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. 

மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தோழர்கள் உமர், ஹரிஹரன், கொண்டல்சாமி உள்ளிட்ட தோழர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். 

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி.வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. பொதுச் செயலாளர் தெஹ்லான் பாகவி, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் திரு ஜவாஹிருல்லா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்களும் தோழர்களும் இதில் பங்கேற்றனர். 

”ஐ.நா. ஒழிக” என முழக்கமிட்டவாறு, இளைஞர்கள் ஐ.நா. மன்றக் கொடியைக் கொளுத்தினர். ஐ.நா. செயலாளர் பான் கீ மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோம்ஸ் ஆகியோரது உருவப்படங்களும், மனிதகுலப் பகைவன் இராசபக்சே உருவபொம்மையும் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட போது , அவ்விடமே பரபரப்பானது. காவல்துறையினரின் முற்றுகையை உடைத்துக் கொண்டு செல்லத் தோழர்கள் முயன்ற போது, தள்ளுமுள்ளு ஆனது. காவல்துறையினர் தோழர்கள் மீது தடி கொண்டுத் தாக்கியதில் சிலருக்கு காயமும் ஏற்பட்டது.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் பற்கேற்றது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித்  தலைமைச் செயற்குழு உறுப்பினர் குழ.பால்ராசு, தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினாகள் தோழர்  தோழர் நா.வைகறை, தோழர் அ.ஆனந்தன், தோழர் முருகன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், சென்னை நகர த.இ.மு. தலைவர் தோழர் வினோத், செயலாளர் தோழர் கோபிநாத், தாம்பரம் நகர த.இ.மு. தலைவர் தோழர் காமராஜ் உள்ளிட்ட திரளான முன்னணியாளர்களும் தோழர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று கைதாயினர். 








(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : குபேரன்)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT