தஞ்சையில் கொலைகாரன் இராசபட்சே கொடும்பாவி
கொளுத்தப்பட்டது..!
தஞ்சை நகரத்தில், நேற்று 08.02.2013 முற்பகல் 11 மணியளவில், இந்திய அரசின் உறுதிமிக்கத் துணையோடு, தமிழீழ மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று
குவித்து, இனப்படுகொலையை
அரங்கேற்றிய சிங்கள இனவெறி அரசின் அதிபர் இராசபக்சேவின் இந்திய வருகையைக்
கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ராசபக்சேவின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது.
தஞ்சை தொடர்வண்டி நிலையம் எதிரில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் திரு
அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமையேற்றார். இந்திய பொதுவுடைமைக் கட்சி மாவட்டச்
செயலாளர் தோழர் திருஞானம், விடுதலைத்
தமிழ்ப்புலிகள் கட்சி தோழர் வெற்றி, பாட்டாளி மக்கள் கட்சி திரு. அரசூர். ஆறுமுகம், நாம் தமிழர் கட்சி தோழர் கரிகாளன் உள்ளிட்ட
பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில்,
மாவட்டச் செயலாளர் தோழர்
குழ.பால்ராசு, தலைமைச்
செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி,
துணைச் செயலாளர் தோழர்
தமிழ்ச்செல்வன், தோழர்கள்
ரெ.கருணாநிதி, க.காமராசு
உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் கலந்துக் கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, “மன்மோகன் அரசே!
சோனியா அரசே! சிங்களன் உனக்கு பங்காளியா! தமிழர்கள் உனக்கு பகையாளியா! வெளியேற்று!
வெளியேற்று! கொலைகாரன் இராசபட்சேயை வெளியேற்று!” என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பினர்.
நிறைவில், கொலைகாரன்
இராசபட்சே கொடும்பாவி கொளுத்தப் பட்டது.
இராசபக்சே இந்திய வருகையைக் கண்டித்து
மதுரையில் உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்!
இந்திய அரசின் உறுதிமிக்கத் துணையோடு, தமிழீழ மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, இனப்படுகொலையை அரங்கேற்றிய சிங்கள இனவெறி
அரசின் அதிபர் இராசபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து மதுரையில், தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, திருவள்ளுவர் சிலை அருகில் நேற்று(08.02.2013)
காலை 11 மணியலவில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு,
வழக்கறிஞர் பகத்சிங்
தலைமையேற்றார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லே) மக்கள் விடுதலை அமைப்பாளர் தோழர்
மீ.த.பாண்டியன் தொடக்க உரையாற்றினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மதுரை
செயலாளர் தோழர் ரெ.இராசு, தமிழ் தமிழர்
இயக்கம் அமைப்பாளர் தோழர் பருதி, மெய்யப்பன்(தமிழ்ப்புலிகள்),
கரிகாலன்(தமிழ்த் தேசிய
விடுதலை இயக்கம்), பொற்கை
பாண்டியன்(தமிழ் மீட்சி இயக்கம்), அபுதாஹீர்(எஸ்.டி.பி.ஐ.),
செராபினா(மகளிர் ஆயம்),
அரோக்கிய மேரி(அனைத்து
தமிழக பெண்கள் கழகம்), முனியாண்டி(புரட்சி
புலிகள்), கற்பூரம்
நாகராசன்(புரட்சி கவிஞர் பேரவை), க.ஜான்மோசஸ்
(மதசார்பற்ற ஜனதாதளம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரு. பரந்தாமன்(தமிழர் தேசிய
இயக்கம்) நிறையாற்றினர்.
Post a Comment