உடனடிச்செய்திகள்

Tuesday, December 23, 2008

கொளத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் : 150 தோழர்களுக்கு சிறை

ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பெசியதாகக் கைது செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்துர் மணி , தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், இயக்குனர் சீமான் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் தமிழக அரசின் இக்கைது நடவடிக்கையை கண்டித்தும் ஈரோடு மாவட்டம் கொளத்தூரில் 22-12-2008 அன்று பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
எழுச்சியுடன் நடந்த இவ்வார்ப்பட்டத்தின் போது ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு, மத்திய அமைச்சர் இளங்கோவன் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. காவல்துறை அதனை தடுக்க முற்பட்ட போது தோழர்கள் அவர்களது எதிர்ப்பையும் மீறி உருவ பொம்மைகளை எரித்து சாம்பலாக்கினர்.
இதன் காரணமாக பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தமிழ் உணர்வாளர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை இரவு 10 மணியளவில் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் பொழுது தோழர்கள் பட்டாசு வெடித்து உற்சாகப்படுத்தினர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT