பெரியார் திராவிடர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் கொளத்தூர் மணி மற்றும் தமிழ்த் திரை இயக்குநர் சீமான் ஆகியோர் இன்று தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் ”தமிழர் எழுச்சி” பொதுக்கூட்டம் நடந்தது. அதில் இயக்குநர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ராசீவ் காந்தியின் கொலையில் காங்கிரசாரின் பங்கு குறித்தும், இந்திய அரசின் ஆரிய பார்ப்பனிய இனவெறி குறித்தும் தோழர்களின் பேச்சால் பெருவாரியான மக்களை இக்கூட்டம் ஈர்த்தது.
இதனையொட்டி மொடக்குறிச்சி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி சீமான், பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோரைக் கைது செய்ய வலியுறுத்தி காவல்துறையில் புகார் அளித்தார்.
அதே கருத்தை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சுதர்சனம் உள்ளிட்டவர்கள் அறிக்கை விடுத்தனர்.
காங்கிரசாரின் இக்கூச்சலையடுத்து, கைதுக்கு காவல்துறையினர் தயாராயினர்.
இந்நிலையில் திண்டுக்கல் அருகே தேவதானப்பட்டியில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த இயக்குநர் சீமானை, ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து மேட்டூரில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இருந்த கொளத்தூர் மணியை, மேட்டூர் டி.எஸ்.பி. சிவானந்தம் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் காவல்துறை அவரையும் கைது செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவல்துறையின் இக்கைது நடவடிக்கைகள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மனித உணர்வின் மேம்பட்ட நிலையில் இருப்பவர்கள்தான் அடுத்தவனின் துன்பங்களுக்கு வருந்து இதயங்களாக இருப்பார் அப்படிப்பட்டவர்கள் மனுதர்மத்தின் எதிரிகளால் காயப்படுத்தப்படுவது ஒன்றும் புதிரானது இல்லை. சாக்கடைகளே கொள்கைகளாக ஓடும் இந்த காங்கிரஸ் கூட்டம், பெருங்கட்சிகளில் தொத்திக்கொண்டு உயிர்காக்கும் கட்சி தமிழ்மக்களிடம் இருந்து இன்னும் பாடம் படிக்க இருக்கின்றது.
நன்றி தோழரே தங்கள் பதிவிற்க்கு.
Post a Comment