தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடந்த 14.12.2008 அன்று ஈரோட்டில் நடத்திய "தமிழர் எழுச்சி உரைவீச்சு" பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக இயக்குனர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்து}ர் மணி ஆகியோரை மீது தமிழகக் காங்கிரசார் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதன் பேரில், இயக்குனர் சீமான், கொளத்து}ர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டு வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று மாலை சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து அதன் பொதுச் செயலாளர் பெ.மணியரசனும் கைது செய்யப்பட்டார்.
சனிக்கிழமை காலை சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு காவல்துறை வாகனத்தில் அவர் கொண்டு வரப்பட்டார். காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் அவர் ஈரோடு மூலப்பாளையத்தில் உள்ள மேஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
'சீக்கியர்களோ மலையாளிகளோ கூட்டமாகக் கொலை செய்யப்பட்டால் சோனியாவும், மன்மோகன் சிங்கும் ஆயதம் தருவார்களா? பாழ்பட்ட தமிழனத்தின் பிறந்தவர்கள் என்ற ஒரேக் காரணத்திற்காக தமிழனைக் கொல்ல இந்தியா ஆயதம் தருகிறது. 406 மீனவர்களை சுட்டுக் கொன்ற போதும் அதனை நிறுத்தாவில்லை. காங்கிரசை ஒழிக்காமல் தமிழினத்திற்கு விடிவே இல்லை.'
இவ்வாறு அவர் கூறினார்.
பெ.மணியரசன், கொளத்து}ர் மணி, சீமான் ஆகியோரின் கைதைக் கண்டித்து நேற்றும் இன்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தமிழின உணர்வாளர்கள் சுவரொட்கள், துண்டறிக்கைகள் வெளியிட்டியும், ஆர்ப்;பாட்டங்கள் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment