உடனடிச்செய்திகள்

Tuesday, December 23, 2008

தஞ்சையில் ஆர்ப்பாட்டம் : இளங்கோவனுக்கு செருப்பு மாலை : த.தே.பொ.க. வினர் 17 பேர் கைது

ஈரோட்டு பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோரை விடுவிக்கக் கோரி தஞ்சை செங்கிப்பட்டியில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க.வின் தஞ்சை நகர செயலாளர் இராசு. முனியாண்டி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சித் தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும் இதில் திரளாகக் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஈழத்தமிழாகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தலைவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் படங்கள் செருப்பு மாலையிடப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு தீ வைத்து எரியுட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 5 பேரை முதலில் காவல்துறை கைது செய்தது.











ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்த பின்னர் காவல்துறையினர் பதிவு செய்த ஒளிப்படக்காட்சிகளை பார்த்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் பிடிக்க செங்கிப்பட்டி கிராமம் முழுக்க தேடுதல் வேட்டை என்ற பெயரில் வீடு வீடாக புகுந்து அடாவடியில் ஈடுபட்டனா. இறுதியாக 17 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT