விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக தமிழக அரசால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் இயக்குநர் சீமான் வாகத்தை எரித்த காங்கிரசாரைக் கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சையில் ஆர்ப்பட்டம்
நடைபெற்றது.
தஞ்சை ஜீப்பிடர் திரையரங்கு அருகே 19-12-2008 அன்று மாலை நடந்த
இவ்வார்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை நகரச் செயலாளர் இராசு.முனியாண்டி தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை, தமிழர் தேசிய இயக்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தஞ்சை நகர முக்கியப் பகுதிகளில் த.தே.பொ.க.வினர் தமிழக அரசின் கைது
நடவடிக்கையைக் கண்டித்து சுவரெழுத்து, சுவரொட்டிகளும், பதாகைகளும்
வைக்கப்பட்டுள்ளன.
Post a Comment