
சிங்கள அரசு போரை நிறுத்த வேண்டியும் இனி மேலும் தமிழினப் படுகொலை தொடரக் கூடாதென்றும் மத்திய அரசு இப் பிரச்சனையில் உடனடியாக தலையிட வேண்டியும் ஏற்காடு பேருந்து நிலையத்தில் 21-12-2008 அன்று காலை 8 மணி முதல் இரவு 5 மணிவரை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது,
இதில் நீலமலை தோட்டத் தொழிலாளர் தலைவர் திரு, வீ,க. நல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், சேவராய் தொழிளாளர் சம்மேளனம் ஆகிய அமைப்புத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து ஏற்காடு ஒன்றிய பெரியார் தி.க. ஒருங்கிணைப்பில் ஒண்டிக்கடை அண்ணா சிலை அருகில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. தோழர் சீமான், தோழர் பெ.மணியரசன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் சீமானின் வாகனத்தைக் கொளுத்திய காங்கிரசாரை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பட்டத்திற்கு ஏற்காடு பெ.தி.க. ஒன்றியச் செயலாளர் இரா.உலகநாதன் தலைமை தாங்கினார். தமிழின உணர்வாளர்களைக் கைது செய்த தமிழக அரசைக் கண்டித்தும் இயக்குநர் சீமானின் வாகனத்தைக் கொளுத்தியக் காங்கிரசின் வன்முறைப் போக்கைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Post a Comment