தமிழகத்தில் பேரெழுச்சி உருவாக்கிய 'தமிழர் எழுச்சி உரைவீச்சு' நிகழ்வில் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ. மணியரசன் உரை!
தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் “தமிழர் எழுச்சி உரைவீச்சு” என்ற தலைபபில், 14.12.2012 அன்று எழுச்சிமிகுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கானப் பொதுமக்கள் கலந்து கொண்ட இப்பொதுக்கூட்டத்தில், தமிழீழ விடுதலையையும், அவர்களது விடுதலை அமைப்பான விடுதலைப்புலிகளை ஆதரித்தும் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி, இயக்குநர் சீமான் ஆகியோர் பேசினர்.
தலைவர்களின் இப்பேச்சை கண்டு கொதித்த காங்கிரசுத் தலைவர்கள், தமிழகக் காவல்துறையினரிடம் புகார் மனு கொடுத்தனர். அதற்கேற்ப கருணாநிதி அரசின் காவல்துறை தோழர்கள் பெ.மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தது.
Post a Comment