
ஈழத்தமிழர்க்கு ஆதரவாக பேசிய பெரியார் திராவிடா கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், இயக்குநர் சீமான் ஆகியோரை கைது செய்த தமிழக அரசைக் கண்டித்தும், இயக்குநர் சீமானின் வாகனத்தைக் கொளுத்திய காங்கிசாரைக் கண்டித்தும் புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று (22-12-2008) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவை சாரம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் நடந்த இவ்வார்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் தலைமை தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உட்பட பல அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் இதில் கலந்து கொண்டனர்.




இவ்வார்ப்பாட்டத்தின் இடையில் தமிழினத்திற்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு சவப்பாடை கட்டி பெரியார் தி.க. தோழர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனா. பின்னர் செருப்படிகளுடன் அச்சவப்பாடை "மரியாதை" செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால் புதுச்சேரியில் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
துணிச்சலான முயற்சி இவை.
கருஞ்சட்டைகள் நீதியைத் தவீர வேறெதற்கும் அஞ்சாது என்பதை நிருபித்திருக்கிறார்கள்.
Post a Comment