ஈரோட்டில் த.தே.பொ.க. நடத்திய பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பெசியதாக த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெ.தி.க. தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோர் தமிழக அரசுக் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இக்கைதை வலியுறுத்திய காங்கிரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அக்கட்சித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இவ்வார்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம் ஆனூர் செகதீசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பரணிப்பாவலன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.
அமைதியாக நடந்த இவ்வார்ப்பாட்டதின் போது ரகளையில் ஈடுபட்ட காங்கிரசாருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக காங்கிரசார் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் உள்ளிட்ட 62 பேரையும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் பச்சை, பகலவன், சாரநாத், ரஜபுத்திரன் உள்ளிட்ட 11 பேரையும் காவல் துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது.
இவ்வாறு, தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக நடைபெறும் கண்டன போராட்டங்களில் ரகளையில் ஈடுபடும் காங்கிரசாரைக் கைது செய்யாமல் காங்கிரசின் வெறிக்கூச்சல் காரணமாக தமிழுணர்வாளர்களைக் கைது செய்த தமிழக அரசை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
Post a Comment