முல்லைப் பெரியாற்று அணை உரிமையை பறிக்கும் மலையாளிகளை தமிழகத்திலிருந்து வெளியேற்று!
உச்சநீதிமன்றத் தீர்ப்பை துச்சமாக எண்ணி காலில் போட்டு மிதித்து வருகிறது மலையாள வெறி கேரள அரசு. ஒருமுறைக்கு மூன்று முறை உச்சநீதிமன்றம் தீர்ப்புரைத்தப் பின்னும் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்க கேரள அரசு மறுத்து வருகிறது. முன்னர் இருந்த அச்சுதானந்தனின் இடதுசாரி அரசாக இருந்தாலும், இப்போதுள்ள உம்மன் சான்டியின் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் இந்த அடாவடியில் ஒரே வகையில் செயல்படுகின்றன.
புதிய அணை கட்டுவது என்ற பெயரால், இருக்கின்ற அணையை உடைக்கும் சூழ்ச்சித் திட்டத்தில் கேரள அரசு இறங்கியுள்ளது. இதனால், பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் சாகுபடிக்கு நீரின்றி பாலையாகி வருகின்றன. தென் தமிழகத்தின் பல இலட்சம் மக்கள் குடிதண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கின்றனர்.
வானுயர்ந்த நகை மாளிகைகளையும் தொழிலகங்களையும் தமிழ்நாட்டில் நிறுவிக் கொண்டு, பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளை குவித்துக் கொண்டு பெரும் எண்ணிக்கையில் மலையாளிகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தாலும், கேரள அரசு எந்தத் தயக்கமும் இன்றி தமிழினத்திற்கு எதிராக தனது அடாவடியைத் தொடர்கிறது. இதற்கு இந்திய அரசு துணை போகிறது. நீதிமன்றத் தீர்ப்பைக் கூட செயல்படுத்தவில்லை.
எனவே, முல்லைப் பெரியாறு உரிமையை இனியும் கேரள அரசு தொடர்ந்து மறுத்தால் அதற்கு பதிலடியாக, தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகளை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
"முல்லைப் பெரியாறு உரிமையை மறுக்கும் மலையாளிகளை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவோம்" என்ற முழக்கத்தின் கீழ் தமிழர்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இம்முழக்கத்தை விளக்கி பரப்புரைகளும், அதைத் தொடர்ந்து போராட்டங்களும் நடத்துவதென என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
Post a Comment