உடனடிச்செய்திகள்

Tuesday, September 27, 2011

இராசபட்சேவை குற்றவாளிக் கூண்டிலேற்றுக - ஓசூர் த.தே.பொ.க. மாநாட்டில் தீர்மானம்!

 
இந்திய அரசின் துணையோடு ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்த, சிங்கள இனவெறியன் இராசபட்சேவை குற்றவாளிக் கூண்டிலேற்ற வேண்டும் என்றும், இராசபட்சே மீதான விசாரணைக்கு தடை ஏற்படுத்தும் இந்திய அரசுக்கு கண்டனம் என்றும், ஓசூரில் தமிழ்த் தெசப் பொதுவுடைமைக் கட்சி கடந்த ஞாயிறு(25.09.2011) அன்று நடத்திய, தமிழினத் தற்காப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் வருமாறு.
 
 1.   இனப்படுகொலைக் குற்றவாளி இராசபட்சேயைக் கூண்டிலேற்றுக! இராசபட்சேயை விசாரிக்க தடை ஏற்படுத்தும் இந்திய அரசைக் கண்டிக்கிறோம்!

 

ஈழத்தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேரை இனப்படுகொலை செய்த இராசபட்சே கும்பல், இன்று உலகச் சமூகத்தின் முன் குற்றவாளிகளாக அம்பலப்பட்டு நிற்கிறது. தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், உலகம் பார்த்திராத சித்திரவதை முறைகளையும் கையாண்டு சிங்கள அரசு இந்திய ஏகாதிபத்தியத்தின் துணையோடு செய்த இனப்படுகொலையின் உச்சமாக முள்ளிவாய்க்கால் அழிப்பு நிகழ்ந்தது.


இந்த தமிழின அழிப்பு நடந்தபோது மவுனப் பார்வையாளர்களாக இருந்த உலகச் சமூகம் இன்று விழித்துக் கொண்டுள்ளது. .நா. பொதுச் செயலாளர் நியமித்த விசாரணைக் குழு இராசபட்சே கும்பல் போர்க்குற்றவாளி என அறிவித்தது. .நா. மனித உரிமை மன்றம் இவ்வறிக்கையின் மீது கவனம் செலுத்தி வருகிறது.

 

ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இராசபட்சே மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என தீர்மானம் இயற்றியது. சேனல்-4 தொலைக்காட்சி, எடுத்துக்காட்டிய சிங்களப் படையினரின் இனக்கொலைக் குற்றங்கள், பிரித்தானிய அரசை உலுக்கியது. இராசபட்சே குற்றக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என பிரிட்டன் பிரதமர் கேமரூன் அறிவித்தார். அமெரிக்க நீதிமன்றம் இராசபட்சேயை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

 

இந்த நிலையிலும் கூட, சீனா, இரசியாவுடன் இணைந்து இந்தியா இராசபட்சேயை உலக அரங்கில் பாதுகாக்கும் மனிதகுலப்பகை நடவடிக்கையில் தொடர்கின்றது. இதனை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

 

இராசபட்சே கும்பலையும் அவர்களுக்குத் துணை நின்ற மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய அரசுத் தலைவர்களையும், இனப்படுகொலை குற்றத்திற்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டுமென்று தமிழினத் தற்காப்பு மாநாடு .நா. மன்றத்தை வலியுறுத்துகிறது.

 

இனவெறி சிங்கள அரசுக்கு வழங்கி வரும் அரசியல், பொருளியல் ஆதரவுகளை இந்திய அரசு உடனே கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறது. பொருளாதாரத் தடை விதிக்குமாறு வலியுறுத்துகிறது.

 

ஈழத்தமிழர்களை அவரவர் குடியிருப்புகளில் அமர்த்தி, சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தி, தமிழீழத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்தவும், அதன் பிறகு .நா. மேற்பார்வையில் ஈழத்தமிழர்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் தீர்வு காணவும் உலக நாடுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT