உடனடிச்செய்திகள்

Tuesday, September 27, 2011

மீனவர்களுக்கு பாதுகாக்க தற்காப்பு படை அமைக்க வேண்டும் - ஓசூர் த.தே.பொ.க. மாநாட்டில் தீர்மானம்!

 
இந்திய அரசின் துணையோடு நடக்கும் தமிழக மீனவர் படுகொலையைத் தடுக்க, தமிழக அரசு மீனவர்களைக் கொன்ற தற்காப்பு படை அமைத்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்க வேண்டும் என, ஓசூரில் தமிழ்த் தெசப் பொதுவுடைமைக் கட்சி கடந்த ஞாயிறு(25.09.2011) அன்று நடத்திய, தமிழினத் தற்காப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் வருமாறு.
 

  தமிழக அரசே! தமிழக மீனவர்களுக்கு தற்காப்புப் படை(ஹோம் கார்டு) அமைத்துக் கொடு!

 

இந்திய வல்லரசின் மறைமுக ஆதரவோடு, சிங்களக் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்வதும், சித்திரவதை செய்து இழிவுபடுத்துவதும் மீன்பிடி படகுகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டப் பின்னரும், இந்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை.

 

தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்வதைத் தவிர இனி வேறு வழியில்லை. எனவே, தமிழக மீனவர்களைக் கொண்டு மீனவர்களுக்கான தற்காப்புப் படை(ஹோம் கார்டு) ஒன்றை நிறுவி அவர்களுக்கு ஆயுதமும், பயிற்சியும் அளிக்க வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT