உடனடிச்செய்திகள்

Tuesday, September 27, 2011

உயிரித் தொழில்நுட்ப சட்டத்தை கைவிடுக - ஓசூர் த.தே.பொ.க. மாநாட்டில் தீர்மானம்!

உழவர்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்றுச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என ஓசூரில் 25.09.2011அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய தமிழினத் தற்காப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
 உழவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் உயிரித் தொழில் நுட்ப சட்டத்தை கைவிடு!

 

அறிவியலாளர்கள், சூழலியலாளர்கள், உழவர் இயக்கங்களின் கடும் எதிர்ப்பால் தள்ளிவைக்கப்பட்டிருந்த 'இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்றுச் சட்டம் 2009'-ஐ மீண்டும் சட்டமாக்க இந்திய அரசு முயல்கிறது.

 

இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வேளாண்மையில் மாநிலத்திற்கு உள்ள அதிகாரம் மேலும் பறிக்கப்படும். மரபீனி மாற்றுப் பயிர்கள் வேளாண்மையை ஆக்கிரமிக்கும்.  சுற்றுச்சூழல் நஞ்சாகும். இச்சட்டப்படி நிறுவப்பெரும் ஒழுங்கு முறை ஆணையம் நியாயமற்ற முறையில்  ஒரு மரபீனி மாற்ற விதைக்கோ, மருந்துப்பொருளுக்கோ அனுமதி வழங்கினால் அதனை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக முடியாது. பன்னாட்டு நிறுவனங்களின் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு எதிராக பரப்புரை செய்பவர்கள் ஓராண்டு  சிறைத்தண்டனைக்கு ஆளாவார்கள்.

 

உழவர்களையும் நுகர்வோரையும் ஒருசேரத் தாக்கும் இச்சட்டதை இந்தியா கைவிட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. அறிவியலாளர்களும், சூழலியலாளர்களும், உழவர்களும், மண்ணுரிமை மீது அக்கறைக் கொண்டோரும் இச்சட்டத்திற்கு எதிராகப் போராட வருமாறு இம்மாநாடு அழைக்கிறது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT