உடனடிச்செய்திகள்

Friday, September 23, 2011

தமிழ்த் தேசியம் மக்களின் முழக்கமாக மாறி வருகின்றது - பெ.மணியரசன் பேச்சு!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர்  பெ.மணியரசன் பேச்சு!

 

"தமிழ்த் தேசியம் மக்களின் முழக்கமாக மாறி வருகின்றது"  என ஓசூரில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் ஆறாவது சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தை .தே.பொ.. கொடியேற்றி வைத்து தொடங்கி வைத்த, கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

 

ஓசூர் வசந்த நகர் தாயப்பா திருமண மண்டபத்தில் நடக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் 6ஆவது சிறப்புப் பொதுக்குழு இன்று(23.09.2011) காலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இப்பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து வரும் ஞாயிறு(25.09.2011) அன்று "தமிழினத் தற்காப்பு மாநாடு" நடக்கிறது. இன்றைய அரங்கிற்கு, .தே.பொ.. பொதுக்குழு உறுப்பினர் மறைந்த தோழர் .அர.மணிபாரதி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ".அர.மணிபாரதி நினைவரங்கம்" என பெயரிடப்பட்டது.

 

இப்பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழகமெங்குமிருந்து .தே.பொ.. பொதுக்குழு உறுப்பினர்களும், சிறப்புப் பேராளர்களும் திரளாக கலந்து கொண்டனர். தொடக்க நிகழ்வாக பொதுக்குழுவை வழி நடத்தும் தலைமைக்குழு பேராளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. .தே.பொ.. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு, பொதுக்குழு உறுப்பினர் பெண்ணாடம் தோழர் .முருகன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

அதனைத் தொடர்ந்து, .தே.பொ.. கொடியை ஏற்றி வைத்துப் பேசிய, .தே.பொ.. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், ".தே.பொ.. கொடியை ஒவ்வொரு முறை ஏற்றி வைக்கும் போது தமிழ்நாட்டுத் தமிழர்களை தொடர்ந்து ஒடுக்கி வருகிற, ஈழத்தில் நம் இனத்தை அழித்தொழித்த இந்திய ஏகாதிபத்திய அரசின் பிடியிலிருந்து தமிழ்த்தேசம் தனது இறையாண்மையை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு தமிழரும் நெஞ்சில் நிறுத்த வேண்டும். தமிழ் இனத்தின் அனைத்து சிக்கல்களுக்குமான தீர்வு தமிழ்நாட்டு விடுதலையில் தான் அடங்கியிருக்கிறது. தமிழ்த் தேசியம் மக்களின் முழக்கமாக மாறி வருகின்றது. இப்பொழுது நாம் ஏற்றியுள்ள கொடி தமிழ்த் தேசத்தின் கொடியாக மாற வேண்டும்" என்று பேசினார்.

 

கூட்டம் தொடங்கப்படுவதற்கு முன், ஈழப்போரில் மடிந்த தமிழீழ மக்களுக்கும், விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளுக்கும், மறைந்த .தே.பொ.. தோழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி ஓர் நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. அதன் பின் நடந்த கூட்டத்தில், .தே.பொ.. கொள்கை அறிக்கை மற்றும் அமைப்பு அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதன் பின் விவாதங்கள் நடந்து இரண்டு அறிக்கைகள் ஏற்கப்பட்டன.

 

"வரலாற்றில் முதன்முதலாகத் தமிழ்நாடு நேரடியாக வடஇந்திய ஆட்சித் தலைமையின் கீழ் வந்தது 1947 ஆகஸ்டு 15ஆம் நாள் ஆகும். வெள்ளை பிரித்தானிய ஏகாதிபத்திய அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு, ஆரிய இந்திய ஏகாதிபத்தியதின் அடிமை நுகத்தடியில் சிக்கியது தமிழ்நாடு. இந்த அடிமை நிலையே தமிழினத்தின் அடையாளத்தை மறைக்கிறது. தமிழகத்தில் நிலவும் பொருளியல் சுரண்டல், வர்ணசாதி ஆதிக்கம், சூழலியல் சீர்கேடு, சனநாயக மறுப்பு போன்ற அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த அடிமை நிலையே ஆகும். இந்த அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்று தனக்கான இறையாண்மையுள்ள குடியரசை நிறுவிக் கொள்வதே தமிழ்த் தேசிய இனத்தின் முன்னுள்ள வரலாற்றுக் கடமையாகும்" என்று கொள்கை அறிக்கை சுட்டிக்காட்டியது.

 

அரசியல் அறிக்கையை பொதுச் செயலாளர் பெ.மணியரசன் முன் வைத்தார். விவாதத்திற்குப் பிறகு, அவ்வறிக்கை ஏற்கப்பட்டது. சிறப்புப் பொதுக்குழுவின் கூட்டம் தொடர்ந்து நாளையும் நடைபெறுகின்றது.


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு

தமிழ்மது said...

"... இந்த அடிமை நிலையே ஆகும். இந்த அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்று தனக்கான இறையாண்மையுள்ள குடியரசை நிறுவிக் கொள்வதே தமிழ்த் தேசிய இனத்தின் முன்னுள்ள வரலாற்றுக் கடமையாகும்"

சொத்தைப் பிரிங்கடா...

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT